கண்ணூர்

கண்ணூர்

அழகிய கடற்கரைகள், மலை வாசஸ்தலங்கள், உப்பங்கழிகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் யாத்திரை மையங்கள் ஆகியவற்றால் நிறையப்பெற்ற  கண்ணூர் உண்மையிலேயே சுற்றுலா பார்வையாளர்களை ஈர்க்கும் திறனைக் கொண்ட ஒரு இடமாகும். இந்த இடம் கைத்தறிக்கும் பெயர் பெற்றது இந்த தொழில்கள் மட்டுமல்லாது, துடிப்பான நாட்டுப்புற கலை மற்றும் நாட்டுப்புற இசை,தெய்யம் மற்றும் தீயாட்டம் ஆகியவையும் கண்ணூரில் முக்கியமான சடங்கு கலைகளாகும்.

பொறுப்பு சுற்றுலா இயக்கம் 2017 ஆம் ஆண்டு கண்ணூரில் தொடங்கப்பட்டது. தற்போது, இங்கு RT மிஷன் உற்பத்தி-கொள்முதல் மற்றும் விநியோக அலகுகளை அடையாளம் காணும் செயல்முறையை செய்து வருகிறது.

இது தவிர, RT மிஷன் கண்ணூரில் உள்ளூர் சமூகங்களுக்காக பல சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சமூகத்தை இணைக்கும் அனைத்து செயல்முறைகளையும் மிஷன் கவனித்துக் கொள்ளும். மலநாடு-மலபார் நதிக் கப்பல் செயல்படுத்துதலில் மிஷனும் முக்கிய பங்கு வகிக்கிறது. வட மலபாரில் உள்ள நதிகளை இணைக்கும் இந்த கப்பல் திட்டம், வடக்கு கேரளாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படுகிறது.

கண்ணூரில் RT மிஷன் 2017 அக்டோபரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 500 பேருக்கு மேல் அதிகமானோர் கலந்து கொண்டனர். பிப்ரவரி 2018 இல் ஒரு பொது நோக்குநிலை திட்டம் மற்றும் 3 நாள் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது  பண்ணை மற்றும் தங்கும் விடுதிகள் உட்பட கூடாரம் கட்டி தங்குவதற்கு இங்கு பலர் ஆர்வமாக உள்ளனர். சுமார் 101 பேர் கலந்து கொண்ட சமூக சுற்றுப்பயண தலைவர்களின் முதல் தொகுதிக்கான பயிற்சியும் இந்த தலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடந்தது.சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தில் கல்லியச்சேரி தொகுதியில் உள்ள ஊராட்சிகள், குடும்பஸ்ரீ மற்றும் கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் கிளப்புகள் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.  

தளிபரம்புவில் உள்ள ஒன்பது ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக ஒன்பது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள ஊராட்சி மற்றும் குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கண்ணூரில் RT மிஷனின் மற்றொரு குறிப்பிடத்தக்க முயற்சி பெல் மெட்டல் தொழிலாளர்களின் குடும்ப சந்திப்பு ஆகும். முயற்சியின் ஒரு பகுதியாக ஒரு நாள் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.

RT மிஷன் விரைவில் கண்ணூரில் ஐந்து மாதிரி RT கிராமங்களை அறிமுகப்படுத்தவுள்ளது கொல்துருத்தி தீவு,  தெக்கும்பாடு தீவு, பாம்புருத்தி தீவு, எழோம் மற்றும் மலப்பட்டம். தருமடம் புதிய RTயாக உருவாக்கப்படும் இலக்குகளில் அடங்கும்.. முழுப்பிலாங்காடு மற்றும் தர்மந்தம் ஆகியவை கண்ணூரில் உள்ள RT மிஷனின் இரண்டு சுத்தமான இடங்களாகும். கண்ணூரில் RT மிஷன் 44 வளவாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

கண்ணூரிலும் 'நாட்டின்புரங்களில் ஓணம் உன்னம் ஓணசம்மனைகள் வாங்கம்' நிகழ்ச்சியை RT மிஷன் நடத்துகிறது.  கேரளாவின் பண்டைய வர்த்தக துறைமுகமான கண்ணூர், பசுமையான மற்றும் அமைதியான நீல நிற பார்வையுடன் பயணிகளை அரவணைக்கிறது. கேரளாவில் உள்ள ஒரே முஸ்லீம் அரச குடும்பமான அரக்கல் குடும்பத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரக்கல் அருங்காட்சியகம் மற்றும் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட புனித ஏஞ்சலோ கோட்டை ஆகியவை இந்திய வரலாற்றில் கண்ணூரின் சீரிய பங்கினை சுட்டிக்காட்டுகின்றன. முத்தப்பன் கோயில் மற்றும் முழுப்பிலாங்காட் கடற்கரை ஆகியவை மாவட்டத்தின் பெருமையை நிறைவு செய்கின்றன.

கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையாலும், மேற்கில் லட்சத்தீவு கடலாலும் காக்கப்படும் இந்த இடம் அதன் வசீகர அழகுடன் பயணிகளுக்கு என்றென்றும் அவர்கள் மனதால் போற்றும் பயணத்தை வழங்குகிறது. வழக்கமான இடங்களைத் தவிர, பொறுப்புள்ள சுற்றுலா ஒருவரை கண்ணூர் கிராமங்கள் வழியாக உள்ளூர் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையைப் பெற நெருக்கமான ஒரு பாதையில் இட்டுச்செல்லும். கூடாரங்களில் முகாமிடுதல் மற்றும் மூங்கில் ராஃப்டிங் ஆகியவை இங்கு வழங்கப்படும் சில ஆத்மார்த்தமான அனுபவங்கள் ஆகும்.

இங்குள்ள அமைதியான கிராமங்கள் வழியாக நடப்பது ஒரு ஆறுதலான, ஆனால் உற்சாகமான அனுபவமாகும். கண்ணூர் கேரளாவில் பல சாகச ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும். சாகச நடவடிக்கைகள் மற்றும் மலையேற்றங்கள் மட்டுமன்றி, ஜாதிக்காய் பழம் மற்றும் கள்ளின் அற்புதங்களை அவிழ்த்து, மிதமான மதுபானம் அருந்தவும் வழிவகை செய்கிறது. 

மாநிலம் முழுவதும் பயணிகளை உற்சாகப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. "கடவுளின் உணவு" என்று அழைக்கப்படும் கோகோ பழம், பண்ணைகள் வழியாக ஒரு நெடிய பயணத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. தேங்காய் & பனை இலைகள் நெய்தல்-அதன் கவர்ச்சியான அம்சங்கள்  மற்றும் சுற்றுச்சூழளுக்கு இணக்கமான பண்பு ஆகியவற்றால் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கின்றன. இது இப்போது பிரபலமான சூழல் அணுக்க தயாரிப்பு ஆகும்.

கண்ணூர், 'தறிகள் மற்றும் கதைகளின் நகரம்' என்று அழைக்கப்பட்டு,அதன் கைத்தறி தொழில்களால் நிறைந்துள்ளது. மேலும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.இங்கு நெய்யப்படும் கைத்தறிகள் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. மேலும் புடவைகளின் வண்ணங்களும் டிசைன்களும்,  இங்கு தயாரிக்கப்படும் மற்ற துணிகளும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கத் தவறுவதில்லை.

கண்ணூரில் பொறுப்பு சுற்றுலா இயக்கம் ,பயணிகள் ரப்பர் தட்டுதல் செயல்முறையை ஆராய ஒரு பெரும் வாய்ப்பு நல்குகிறது. நண்டு மீன்பிடித்தல் கண்ணூரில் உள்ள மற்றொரு பிரபலமான ஈர்ப்பு ஆகும்.  சுற்றுலாப் பயணிகள், பெல் மெட்டல் தயாரிப்பைப் பார்க்கவும் மற்றும் கேரளாவின் பழங்கால கலை, மட்பாண்டங்களில் பாரம்பரியமாக அறியப்பட்ட கண்ணூரில் உள்ள ஒரு சிறிய குக்கிராமத்தைப் பார்வையிடவும் அற்புத வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

கேரளாவின் பெருமை வாய்ந்த, பண்டைய தற்காப்புக் கலையான களரிப்பயட்டு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறது. கண்ணூர், ஒருவருக்கு இக்கலையை நேரில் பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஒரு பன்முக நிலமான கண்ணூர் அதன் பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு மறைத்து வைத்துள்ளது. இதன் மூலம் யாரும் ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதிசெய்து, அதை ஒரு சிறந்த விடுமுறை இடமாக மாற்றுகிறது.

அழகிய கடற்கரைகள், மலை வாசஸ்தலங்கள், உப்பங்கழிகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் யாத்திரை மையங்கள் ஆகியவற்றால் பரிசளிக்கப்பட்ட கண்ணூர் உண்மையிலேயே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திறனைக் கொண்ட ஒரு இடமாகும். இந்த இடம் கைத்தறிக்கும் பெயர் பெற்றது.

இந்த தொழில்கள் பற்றி மட்டுமல்லாது , துடிப்பான நாட்டுப்புற கலை மற்றும் நாட்டுப்புற இசை,தெய்யமும் தீயாட்டமும் கண்ணூரில் முக்கியமான சடங்கு கலைகள் குறித்தும் இங்கு நீங்கள் அனுபவித்து உணரலாம். பொறுப்புள்ள சுற்றுலா பல சுற்றுலா தொகுப்புகளை இங்கு வழங்குகிறது. இதன் மூலம் பயணிகள் கண்ணூரின் ஆன்மா மற்றும் வாழ்வியலை அனுபவிக்க முடியும். அவற்றுள் குன்ஹிமங்கலம் தொகுப்பு அது வழங்கும் தனித்துவமான அனுபவங்களுடன் தனித்து நிற்கிறது. 

இதில் பெல் மெட்டல் ஹெரிடேஜ் கிராமம் வழியான பயணம் உள்ளது. மேலும் நெசவாளர் சங்கம் சென்று வருகை, பாரம்பரிய பொற்கொல்லர் வீடுகள் மற்றும் மீன்பிடித்தல், தென்னை மரம் ஏறுதல், தென்னை இலை நெய்தல் போன்ற பல சுவாரஸ்யமான நடவடிக்கைகள் அடங்கிய அற்புத தொகுப்பு.

தொடர்பு கொள்ள

ஸ்ரீ. சரீஷ் டி.கே.
மாவட்ட பணி ஒருங்கிணைப்பாளர் (I/c)
பொறுப்பு சுற்றுலா மிஷன்
மாவட்ட அலுவலகம் - சுற்றுலாத் துறை
டிடிபிசி கட்டிடம்
கால்டெக்ஸ் ஜென்., கண்ணூர் - 670002

மேலும் இலக்குகள்