இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேக்கடி, மசாலாத் தோட்டங்களின் நறுமணம் மற்றும் துடிப்பான வனப்பகுதியின் காட்சிகளால் நிறைந்த ஒரு மிக அழகான இடமாகும்.
தேக்கடியின் கிராம வாழ்க்கை அனுபவம் மிகவும் தனித்துவமானது. மட்டுமன்றி தன்னிகரற்றது. இது ஒரு பாரம்பரிய மருத்துவரான வின்சென்ட்டின் வாழ்க்கையை நமக்கு எடுத்து சொல்கிறது. மேலும் பிலிப் - தேனீ வளர்ப்பு பயிற்சியாளர், ராஜீவ் - ஒரு அப்பள தயாரிப்பாளர், ஜோம்சி - ஒரு சாக்லேட் தயாரிப்பாளர், மற்றும் அதிகம் அறியப்படாத பல மாந்தர்களின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்துகிறது. மக்களால் அதிகம் அறியப்படாத இலக்கான வலியபாறை மற்றும் ஆன்மீக தலமான சாந்திகிரி ஆசிரமம் ஆகியவையும் இங்கு நமக்கு கிடைக்க பெறுகிறது.
தேக்கடி சுற்றுலா தொகுப்பு என்பது சாதாரண மனிதனின் வாழ்க்கையின் வழியாக ஒரு பயணம் ஆகும். இது கிராம வாழ்க்கையின் ஆன்மாவை நெருங்கி புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் உதவுகிறது. தேக்கடியை ஒரு RT இடமாக தேர்வு செய்வதற்கான முடிவு 21 ஏப்ரல் 2007 அன்று கூட்டம் நடைபெற்ற முதல் எஸ்எல் ஆர்டிசியின் போது எடுக்கப்பட்டது.
23 ஜூன் 2007 அன்று முதல் கூட்டம் நடத்தப்பட்டது, இதன் விளைவாக பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் தளங்களில் பணிபுரியும் குழுக்களுடன் இணைந்து இலக்கு நிலை RT குழு அமைக்கப்பட்டது. RT முறையாக 14 டிசம்பர் 2008 அன்று தேக்கடியில் தொடங்கப்பட்டது. 7 செப்டம்பர், 25 செப்டம்பர் மற்றும் 26 நவம்பர் 2007 அன்று தேக்கடியில் DLRTC கூடியது. தொடக்க நாளிலேயே சுமார் 18 ஹோட்டல்கள் பங்கேற்க ஒப்புக்கொண்டு உள்நாட்டில் காய்கறிகள் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கருத்துப்படி தேக்கடியில் RTயை ஒட்டுமொத்தமாக செயல்படுத்தியது வெற்றிகரமானது என்று கூற முடியாது. தேக்கடியில் உள்ள RT செல் மற்றும் குடும்பஸ்ரீ இடையேயான ஒருங்கிணைப்பு பலவீனமாக இருந்தது. இது தோல்விக்கு ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
தொடர்பு கொள்ள
மாவட்ட பணி ஒருங்கிணைப்பாளர்
பொறுப்பு சுற்றுலா மிஷன்
சுற்றுலா மாவட்ட அலுவலகம்
குமளி, இடுக்கி - 685509