உலகமே வழிபட வரும் தலம்

சபரிமலை, இந்தியாவின் மிகவும் பயபக்தி மிகுந்த புனிதப் பயணத் தலங்களில் ஒன்றாகிய இது ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான மக்களைத் தன்னை நோக்கி ஈர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கேரளாவிலுள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனங்கள் சூழ அமைந்துள்ள சபரிமலை கோயில் ஒரு புனிதமான சரணாலயம் ஆகும். சாதி, சமய, இன வேறுபாடின்றி மக்கள் அனைவரும் சபரிமலைக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.

  சபரிமலையின் முக்கியப் புனிதப் பயணப் பருவம் 41-நாள் மண்டலக் காலம் ஆகும், இது மலையாளத்தின் விருச்சிகம் மாதத்தில் [நவம்பர்-டிசம்பர்] தொடங்குகின்றது.  இது உலகம் முழுவதும் பக்தி மயமான மந்திரங்களும் சடங்குகளும் எதிரொலிக்கும் காலம் ஆகும். 

எப்படிச் செல்வது

சபரிமலைக்கு உங்களை அழைத்துச் செல்ல கண்ணுக்கினிய மூன்று பாதைகள் உள்ளன. ஒன்று எருமேலி வழியாகவும், மற்றொன்று சாலக்கயம் வழியாவும், மூன்றாவது வண்டிப்பெரியாறு வழியாகவும் செல்லக்கூடியதாகும்.

சபரிமலை பற்றி

கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் சுவாமி ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் மலைகளாலும் பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள அடர்த்தியான வனங்களாலும் சூழப்பட்டுள்ளது.

எப்படித் தொடர்புகொள்வது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அலுவலகத்தின் உதவியை நீங்கள் நாடலாம்.

பொதுவான விசாரணை +91 70258 00100

செயல் அதிகாரி +91 473 520 2028

துணைச் செயல் அதிகாரி +91 473 520 2400

நிர்வாக அதிகாரி +91 473 520 2038

தகவல் அலுவலகம் +91 473 520 2048

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top