ஆழி பூஜை, சபரிமலை புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்ற சம்பிரதாய நிகழ்வு ஆகும். இது ஆன்மீக மற்றும் துறவற மனநிலையை அடைவதைக் குறிக்கின்றது. இது பக்தர்கள் நாற்பத்து ஒரு நாள்கள் விரதம் இருந்து மனதளவிலும் உடலளவிலும் குறிப்பிட்ட தூய்மையை அடைந்த பிறகு, புனிதப் பயணம் முடியும் நாளன்று மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு ‘ஆழி’ என்பது கற்பூரம் ஏற்றும் சிதை ஆகும். பக்தர்கள் ’சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று முழக்கமிட்டவாறு சிதையைச் சுற்றி வருகின்றனர். ஆசைகளின் அடையாளமாக விளங்குகின்ற தேங்காய்த் துண்டுகள், அவல் போன்றவை சிதைக்குள் வீசப்படுகின்றன, அவை சுவாமி ஐயப்பனைக் குறிக்கும் தீயில் எரிக்கப்படுகின்றன. சில பக்தர்கள் பக்தி மிகுதியால் ஆழிக்குள் நுழையும் அளவுக்கு சீற்றமும் உற்சாகமும் அடைகின்றனர், அந்த இடம் முழுவதும் எரிதழலைப் பரப்புகின்றனர். இது வழக்கமாக ஒரு பாதுகாப்பான நடைமுறை ஆகும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படுவதில்லை.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top