செய்ய வேண்டியவை

பாரம்பரியப் பாதையில் செல்லவும்

பக்தர்கள் புனிதத் தலத்திற்குச் செல்ல பாரம்பரியப் பாதையான மரக்கூட்டம் – சரம்குத்தி – நடபந்தல் வழியாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

வரிசையாகச் செல்லவும்

18 புனிதப் படிகள் அடைய வரிசையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் 

நடபந்தல் மேம்பாலத்தைப் பயன்படுத்தவும்

பயணம் முடித்துத் திரும்பும்போது நடபந்தல் மேம்பாலத்தை மட்டும் பயன்படுத்தவும்

ஒத்துழைப்பு மிக அவசியம்

தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புச் சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கவும்

தேவஸ்வம் கவுண்டரில் பணம் செலுத்துதல்

டோலி தேவைப்பட்டால், தேவஸ்வம் கவுண்டரில் மட்டுமே பணம் செலுத்தவும்

வாகனங்களை நிறுத்துதல்

வாகனங்களை அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட வாகனம் நிறுத்தும் இடங்களில் மட்டுமே நிறுத்தவும்

அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்

கடமையில் உள்ள காவல்துறையினர் மற்றும் தேவஸ்வம் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்

செய்யக்கூடாதவை

இளைப்பாறாமல் தொடர்ந்து செல்வதைத் தவிர்க்கவும்

இளைப்பாறாமல் தொடர்ந்து செல்லக் கூடாது.  தேவைப்படும்போது இளைப்பாறிவிட்டு அதன் பின் பயணத்தைத் தொடரவும்

மொபைல் போன்கள் கூடாது

கோயில் வளாகத்திற்குள் மொபைல் போன்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது

புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருள்கள் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன

ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது

ஆயுதங்களும் வெடிப்பொருள்களும்  வைத்திருப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது

கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது

சிறுநீர் கழிக்குமிடம் மற்றும் கழிப்பறைகளுக்கு வெளியே சிறுநீர் கழித்தல் மற்றும் மலம் கழித்தல் கூடாது

புனிதப் படிகளில் தேங்காய் உடைக்கக் கூடாது

18 புனிதப் படிகளில் தேங்காய் உடைப்பது தடை செய்யப்பட்டுள்ளது

குப்பை போடக் கூடாது

கழிவுப் பொருள்களை குப்பைத் தொட்டி தவிர வேறு இடங்களில் போடக்கூடாது

இளைப்பாறுவதற்கான கட்டுப்பாடுகள்

மேல் திருமுற்றம் அல்லது தந்திரிநடா பகுதியில் இளைப்பாறுவது தடை செய்யப்பட்டுள்ளது

புனிதப் படிகளில் மண்டியிடக் கூடாது

ஏறும்போது புனிதப் படிகளில் மண்டியிடக் கூடாது

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

தேவைப்பட்டால் எப்பொழுதும் காவல்துறையினரின் உதவியை நாடவும்

சந்தேகத்திற்குரிய நபர்களையும் பொருள்களையும் பார்க்க நேர்ந்தால் அருகிலுள்ள காவல் சாவடியில் தகவல் தெரிவிக்கவும்

முறையான உரிமம் பெறாத கடைகளில் இருந்து உண்ணக்கூடிய பொருள்கள் எதையும் வாங்கக் கூடாது

கூட்டம் அதிகமாக இருந்தால் சன்னதிக்குள் செல்ல வேண்டாம்

அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவ நிலையங்கள் மற்றும் ஆக்சிஜன் பார்லர்களில் மருத்துவ வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

குழந்தைகளும் முதியோர்களும் அடையாள அட்டையைக் கழுத்தில் அணிந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top