English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
குருதி என்பது பண்டைக் காலத்திலிருந்தே சபரிமலை கோயிலின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்துள்ளது. இந்தப் புனிதச் சடங்கு மாளிகைப்புரம் சன்னதியின் பின்னால் அமைந்துள்ள மணிமண்டபத்தின் முன் திறந்தவெளியில் நடத்தப்படுகின்றது. மகரவிளக்கு உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று, மாபெரும் ஊர்வலத்தின் கடைசி நாளைக் குறிக்கும் விதமாக சுவாமி ஐயப்பன் சரம்குத்திக்கு ஏறுகிறார். அத்தாழ பூஜை முடிந்த பிறகு, சரம்குத்திக்கான ஊர்வலம் மணிமண்டபத்தில் இருந்து தொடங்குகின்றது. அரக்கர்கள் மற்றும் மலை தெய்வங்கள் புடைசூழ அவர் அரண்மணைக்கு அமைதியாகத் திரும்பியதும், சடங்குகள் தொடர்கின்றன.
அடுத்த நாள், மாளிகைப்புரத்தில் குருதி சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. அத்தாழ பூஜைக்குப் பிறகு, ஹரிவராசனம் பாராயணத்துடன் சடங்கு நிறைவடைகின்றது