சபரிமலையின் சுவாமி ஐயப்பன் கோயில் பத்தனம்திட்டாவில் வனத்திற்குள் அமைந்துள்ளது. கோயில் ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ளது மற்றும் அது மலைகளாலும் அடர்ந்த வனங்களாலும் சூழப்பட்டுள்ளது. வாகனங்கள் சபரிமலையின் அடிவாரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள பம்பை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. புனித பம்பை நதி இங்கு அமைதியாகப் பாய்கின்றது. இதில் நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகின்றது. பக்தர்கள் அதன் பின் மலையேறத் தொடங்குகின்றனர். சபரிமலைக்குச் செல்ல விரும்புவோர் கடுமையான பாரம்பரிய நடைமுறைகளையும், சடங்குகளையும், ஆயத்தங்களையும், ஆடைக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

சபரிமலைக்குச் செல்ல பக்தர்கள் மூன்று வழிகளில் பயணம் மேற்கொள்ளலாம் – எருமேலி வழி, வண்டிப்பெரியார் வழி மற்றும் சாலக்கயம் வழி. எருமேலி வழிப் பயணத்தில் இரண்டு கட்டங்கள் உள்ளன – ஒன்று எருமேலியில் இருந்து பம்பை வரை, அடுத்து பம்பையில் இருந்து சன்னிதானம் வரை. மொத்தமாக, இந்தப் பயணம் சுமார் 61 கிமீ தொலைவு கொண்டதாகும். வண்டிப்பெரியார் வழி மொத்தம் சுமார் 95 கிமீ தொலைவு கொண்டது. மீண்டும், பக்தர்கள் பம்பையைச் சென்றடைந்த பிறகு, சன்னிதானத்திற்குச் செல்ல அவர்கள் மலையேற வேண்டும். பம்பை நதிக்கு அருகில் அமைந்துள்ள சாலக்கயம் வழியே இவற்றில் எளிதான வழி ஆகும்.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top