English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
சபரிமலை கேரளாவின் தென்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் வனத்திற்குள் அமைந்துள்ளது. அருகாமையில் உள்ள விமான நிலையங்கள் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் ஆகும். கோயிலை அடைய, விமானம் மூலம் கொச்சிக்கு வரும் புனிதப் பயணிகள் சாலை மார்க்கமாக சுமார் 154 கிமீ பயணிக்க வேண்டும் மற்றும் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வரும் புனிதப் பயணிகள் சாலை மார்க்கமாக சுமார் 170 கிமீ பயணிக்க வேண்டும்.
புனிதப் பயணிகள் கோழிக்கோடு, கரிப்பூரில் உள்ள காலிகட் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்திறங்கி அங்கிருந்தும் சபரிமலைக்குச் செல்லலாம் அல்லது மதுரை அல்லது கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு விமான நிலையங்களையும் பயன்படுத்தலாம். ஆயினும், இந்த விமான நிலையங்கள் சபரிமலைக்குச் செல்வதற்கான பயணத்தின் முதலாவது கட்டம் மட்டுமே, அடுத்த கட்டப் பயணத்தை அவர்கள் இரயில் அல்லது சாலை வழியாக மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, விமானம் மூலம் கோழிக்கோடு வந்தடையும் புனிதப் பயணிகள் சுமார் 330 கிமீ தூரத்திற்கு சாலை மார்க்கமாகவோ அல்லது இரயில் மற்றும் சாலை மார்க்கமாகவோ பயணிக்க வேண்டும். அதேபோல, கோயம்புத்தூர் மற்றும் மதுரை வந்தடையும் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 315 கிமீ சாலை மார்க்கமாகவும், மதுரையில் இருந்து சுமார் 250 கிமீ இரயில் மற்றும் சாலை மார்க்கமாகவும் பயணிக்க வேண்டும். பக்தர்கள் கோயம்புத்தூரில் இருந்து கோட்டயம் வரை இரயிலில் பயணிக்கலாம். தோராயமான தூரம் 250 கிமீ. இரயில் பயணத்திற்குப் பிறகு, கடைசி 90 கிமீ தூரத்தை சாலை மார்க்கமாகப் பயணிக்க வேண்டும். இதேபோல, புனிதப் பயணிகள் கோழிக்கோட்டில் இருந்தும் சுமார் 260 கிமீ தொலைவில் உள்ள கோட்டயம் வரை இரயிலில் பயணிக்கலாம். மதுரை விமான நிலையத்தில் இருந்து புனிதப் பயணிகள் சாலை மார்க்கமாக குமுளி வழியாக சபரிமலைக்குச் செல்லலாம்.