கர்நாடகா மாநிலத்திலிருந்து மங்களூர் அல்லது மைசூர் வழியாக வருகின்ற பக்தர்கள் கேரளாவின் மையப் பகுதியாகிய திருச்சூருக்கு வரலாம். அதன் பின் அவர்கள் மூவாட்டுப்புழா-கோட்டயம் சாலை வழியாக சபரிமலைக்குச் செல்லலாம். திருச்சூரில் இருந்து சபரிமலை சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தமிழ்நாடு அல்லது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வரும் பக்தர்கள் கோயம்புத்தூர் அல்லது கூடலூர் வழியாக திருச்சூரைச் சென்றடையலாம். தமிழ்நாட்டின் மத்தியப் பகுதிகளில் இருந்து வரும் புனிதப் பயணிகள் சபரிமலை செல்ல மதுரை வழியாகவோ அல்லது குமுளி வழியாகவோ வரலாம். மதுரையில் இருந்து புனிதத் தலத்திற்குச் செல்ல சுமார் 250 கிலோமீட்டர் சாலை மார்க்கமாகப் பயணிக்க வேண்டும்.

நாகர்கோயில் போன்ற தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள பிராந்தியங்களில் இருந்து வரும் புனிதப் பயணிகள், திருவனந்தபுரம் – கொட்டாரக்கரை – மற்றும் அடூர் வழியாக சபரிமலையைச் சென்றடையலாம். சபரிமலை நாகர்கோயிலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புனிதப் பயணிகள் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம், காயம்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூர் அல்லது திருவல்லா வழியாகவும் வரலாம்.

தமிழ்நாட்டின் செங்கோட்டையில் இருந்து வரும் புனிதப் பயணிகள் புனலூர் வந்து, அங்கிருந்து ரன்னி மற்றும் எருமேலி வழியாகச் சபரிமலையை வந்தடையலாம். எர்ணாகுளத்தில் இருந்து சாலை மார்க்கமாக வரும் புனிதப் பயணிகள் வைக்கம்-எட்டுமானூர் வழியாகக் கோட்டயத்திற்கு வந்து, அங்கிருந்து காஞ்சிரப்பள்ளி-எருமேலி சாலை வழியாக சபரிமலையைச் சென்றடையலாம். மொத்தத் தொலைவு சுமார் 165 கிமீ ஆகும்.

ஆலப்புழாவில் இருந்து வருபவர்கள், சங்கனாச்சேரி-எருமேலி சாலை வழியாக சாலை மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லலாம். ஆலப்புழாவில் இருந்து பயணம் செய்வதுடன், பக்தர்கள் திருவல்லா, கோழஞ்சேரி மற்றும் பத்தனம்திட்டா வழியாகவும் சபரிமலைக்குச் செல்லலாம், இதற்காக சுமார் 125 கிமீ சாலை மார்க்கமாகப் பயணிக்க வேண்டும்.

சபரிமலைக்குச் செல்ல பக்தர்கள் மூன்று வழிகளில் பயணம் மேற்கொள்ளலாம் – எருமேலி வழி, வண்டிப்பெரியார் வழி மற்றும் சாலக்கயம் வழி. எருமேலி வழிப் பயணத்தில் இரண்டு கட்டங்கள் உள்ளன – ஒன்று எருமேலியில் இருந்து பம்பை வரை, அடுத்து பம்பையில் இருந்து சன்னிதானம் வரை. மொத்தமாக, இந்தப் பயணம் சுமார் 61 கிமீ தொலைவு கொண்டதாகும். வண்டிப்பெரியார் வழி மொத்தம் சுமார் 95 கிமீ தொலைவு கொண்டது. மீண்டும், பக்தர்கள் பம்பையைச் சென்றடைந்த பிறகு, சன்னிதானத்திற்குச் செல்ல அவர்கள் மலையேற வேண்டும். பம்பை நதிக்கு அருகில் அமைந்துள்ள சாலக்கயம் வழியே இவற்றில் எளிதான வழி ஆகும்.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top