களமெழுத்து என்பது சபரிமலையின் குறிப்பிடத்தக்க சடங்கு ஆகும், முக்கியமாக இது மகரவிளக்கு திருவிழாவுடன் தொடர்புடையதாகும். இந்தச் சடங்கு, மாளிகைப்புரத்தில் சுவாமி ஐயப்பனின் பூர்வீக வசிப்பிடமாகக் கருதப்படுகின்ற மணிமண்டபத்தில் நடக்கின்றது. மணிமண்டபத்தின் உள்ளே நடைபெறும் களமெழுத்து சடங்கு மகர சங்கரம நாளன்று தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளின் களம் (வண்ணப் பொடிகளைக் கொண்டு தரையில் தெய்வங்களின் முப்பரிமாண உருவங்களை வடிவமைத்தல்) என்பது சுவாமி ஐயப்பனின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் குறிக்கின்றது, மற்றும் ஒன்றாக கடவுளை நோக்கிய அக் குழந்தையின் பயணத்தையும் அவை சித்தரிக்கின்றன.

முதல் நாளில் களம் ஐயப்பனைக் குழந்தையாகச் சித்தரிக்கின்றது. இரண்டாம் நாளில் அளப்பரிய துணிவுள்ள வில்வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாம் நாளில், பந்தளம் மன்னரின் பிரதிநிதி பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு வருகிறார், ஐயப்பன் இளவரசனாகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தப் பிரதிநிதி மணிமண்டபத்திற்கு அருகே உள்ள இராஜமண்டபத்தில் தங்குகிறார். நான்காம் நாளில், ஐயப்பன் புலி மேல் சவாரி செய்பவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்த நான்கு நாள்களில் களமெழுத்து முடிந்த பிறகு, ஐயப்பன் மணிமண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி (18 படிகள்) ஏறிச் செல்லும் சடங்கு நடைபெறுகின்றது.

ஐந்தாம் நாளன்று, களமெழுத்து திருவாபரணத்தை விபூஷித சாஸ்தவமாகக் காட்சிப்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து, எழுநல்லத்து (ஊர்வலம்) மற்றும் அத்தாழ பூஜை ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்த இறுதி நாளன்று, எழுநல்லத்து சரம்குத்தியை அடைகின்றது. களமெழுத்து சடங்கு, சந்தியாவிற்குப் (மாலை) பிறகு தொடங்கி, அத்தாழ பூஜைக்கு (இரவு வழிபாடு) முன்னர் முடிக்கப்பட வேண்டும்.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top