கேரளாவின் மாபெரும் பண்டிகையான ஓணம் பண்டிகை சபரிமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. சிங்கம் (ஆகஸ்டு – செப்டம்பர்) மலையாள மாதத்தில் மாதாந்திர பூஜைகளுடன் விழாக்கள் தொடங்குகின்றன. மாதாந்திர பூஜைகளுக்குப் பிறகு ஓணம் தினத்தன்று கோயில் மீண்டும் திறக்கப்படும்.

உத்தராடத்திற்கு முந்தைய நாளில், தந்திரி கோயில் கதவுகளைத் திறக்கிறார், பூஜை (சடங்குகள்) தொடங்குகின்றன. உத்தராடத்திற்கு, மேல்சாந்தியால் தயாரிக்கப்படும் விருந்து ஐயப்பனுக்கு மரியாதை அளிப்பதற்கானது ஆகும். தந்திரியின் வழிகாட்டுதலின் கீழ், உத்தராட சதயாவிற்குத் தேவையான காய்கறிகள் நறுக்கப்படுகின்றன, தரிசனத்திற்கு வருகின்ற அனைத்துப் பக்தர்களுக்கும் சதயா (விருந்து) பரிமாறப்படுகின்றது. 

திருவோணம் நாளன்று, தேவஸ்வம் ஊழியர்களாலும் கேரளக் காவல்துறையாலும் சுவாமி ஐயப்பனுக்கு சதயா (பெரு விருந்து) படையல் அளிக்கப்படுகின்றது. தேவஸ்வம் போர்டு அவிட்டம் அன்று ஓணம் சதயாவை (விருந்து) நடத்துகின்றது, அதே நேரம் காவல்துறை சதயம் அன்று சதயாவை (விருந்து) நடத்துகின்றது. மாற்றாக, சபரீசன் முன்னிலையில் சதயம் அன்று தனிப்பட்ட ஓணசதயாவை வழங்கலாம். மாளிகைப்புரம் மேல்சாந்தியும் தனது கௌரவத்தின் அடையாளமாக ஓணம் சதயாவைப் பெறுகிறார். 

சன்னிதானத்தில் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக உத்தராடம், திருவோணம், அவிட்டம் மற்றும் சதயம் அன்று, உதயாஸ்தமய பூஜை, 25 கலசாபிஷேகம், கலபாபிஷேகம், படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.        

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top