சபரிமலையின் வருடாந்திரத் திருவிழாவாகிய பங்குனி உத்திரத் திருவிழா தமிழ் மாதமாகிய பங்குனி மாதத்தில் (மார்ச் – ஏப்ரல்) நடைபெறுகின்றது, இது மலையாளத்தின் மீனம் மாதத்தில் வருகின்றது. இந்த பத்து நாள் திருவிழா பள்ளி வேட்டை (வேட்டையாடுதல் சடங்கு) மற்றும் ஆராட்டு (புனிதக் குளியல்) போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகின்றது. திருவிழாவானது சம்பிரதாயப்படி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. 

கொடிக்குர பூஜை, கொடிமர பூஜை மற்றும் கொடியேற்ற பூஜை ஆகியவற்றை முடித்த பிறகு கொடியேற்றம் தொடங்குகின்றது. இதைத் தொடர்ந்து கொடிக்கம்பத்தின் கீழ் தீபாராதனை (தீப வழிபாடு) காட்டப்படுகின்றது. திருவிழா முழுவதும், பிற சிறப்புப் பூஜைகளுடன் சேர்த்து திருவிழாவின் ஒரு பகுதியாக தினமும் ஸ்ரீ பூதபலி மற்றும் உற்சவ பலிகள் நடத்தப்படுகின்றன.

ஒன்பதாம் நாளன்று, சன்னிதானத்திலிருந்து பம்பை வரை பள்ளிவேட்டை ஊர்வலம் நடக்கின்றது. சுவாமி ஐயப்பன் பிறந்த நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தைக் கௌரவிக்கும் விதமாக ஆராட்டு நிகழ்கின்றது. ஆராட்டு முடிந்த பின், சிலையானது பக்தர்களின் வழிபாட்டுக்காக பம்பை கணபதி கோயிலின் பழுக்கா மண்டபத்தில் வைக்கப்படுகின்றது.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top