English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
இந்துக்களைப் பொறுத்தவரை, பம்பை நதி கங்கையைப் போன்றே புனிதமானது, பெரும்பாலும் இது தட்சிண பாகீரதி என அழைக்கப்படுகின்றது. பல புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் வழியாகப் பாய்கின்ற பம்பை, தன் இரு கரைகளுக்கும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அளிக்கிறது. பம்பையின் ஆன்மீகப் புராணங்கள் சபரிமலையுடனும் சுவாமி ஐயப்பனுடனும் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன.
பம்பை, கல்லார் மற்றும் அழுதா நதிகள் சங்கமிக்கும் திரிவேணியில் புனித நீராடல் நடந்ததாக கூறப்படுகின்றது. பம்பை நதியின் இந்தக் கரையில் தான் பந்தளம் மன்னர் குழந்தையை முதன் முதலாகப் பார்த்தார், அந்தக் குழந்தை வளர்ந்து சுவாமி ஐயப்பன் ஆனது. மறவர் படையுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு சுவாமி ஐயப்பன் இங்கு தர்ப்பணம், அல்லது இறந்த ஆன்மாக்களுக்கு சடங்குப் படையல் அளித்ததாகப் புராணம் கூறுகின்றது.
கேரளாவில் பாயும் மூன்றாவது பெரிய நதியாகிய பம்பை, சபரிமலையில் புளச்சி மலையில் உருவாகி வேம்பநாடு உப்பங்கழியில் கலக்கிறது. அதன் கரையில் புகழ்பெற்ற ஆறன்முளா கோயில் உட்பட ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. நதிக் கரைகளில் கற்காலத்தைச் சேர்ந்த தொல்பொருள் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன, இது அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பம்பை ஆற்றுப்படுகையுடன் தொடர்புடைய செழிப்பான கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.