பம்பை சதயா (பம்பை விருந்து) என்பது 41-நாள் சடங்கு நோன்புக்குப் பிறகு சபரிமலைக்கு வருகின்ற பக்தர்களை ஊக்குவிக்கும் பாரம்பரியம் ஆகும். மகரஜோதி மற்றும் மகரவிளக்கைப் பார்ப்பதற்காக பாரம்பரிய கானனபாதை வழியாக வரும் இந்தப் புனிதப் பயணிகள், நீலிமலையில் ஏறுவதற்கு முன் பம்பையில் சதயத்தில் (விருந்து) பங்கேற்கின்றனர். 

வரலாற்று ரீதியாக, அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பகுதியில் இருந்து வரும் புனிதப் பயணிகளுக்கு அவர்கள் கரிமலைப் பாதையைக் கடந்து, கானனபாதை வழியாக பம்பை வந்தடைந்த பிறகு பம்பை சதயா (விருந்து) வழங்கப்பட்டது. இன்று, பம்பை சதயாவில் சேர்கின்ற வேறு பல பக்தர்களுடன் இந்தப் பாரம்பரியம் தொடர்கின்றது. 

பம்பையை வந்தடைந்ததும், சோர்வடைந்த புனிதப் பயணிகள் ஒரு வசதியான இடத்தில் இளைப்பாறுகின்றனர். பின்னர் அவர்கள் மக்கள் கூட்டம் குறைவாக உள்ள இடங்களில் நெருப்புக் கூட்டி உணவு தயாரிக்கின்றனர். அவர்களின் இருமுடிக்கெட்டில் (இரண்டு அறைகள் கொண்ட கட்டு) இருந்து எடுக்கப்படும் அரிசியுடன், அருகாமையில் உள்ள கடைகளில் இருந்து கூடுதலாகத் தேவைப்படும் மளிகைப் பொருள்களையும் காய்கறிகளையும் வாங்கிக் கொள்கின்றனர். உப்பேரி (பொறித்த வாழைப்பழ சிப்ஸ்) முதல் பாயசம் (இனிப்புக் கொழுக்கட்டை) வரையிலான பலதரப்பட்ட உணவு வகைகளில் எவற்றைத் தயாரிப்பது என முன்கூட்டியே முடிவு செய்யப்படுகின்றது. 

புனிதப் பயணிகள் தட்சணையாக (சடங்குப் படையல்) பம்பை சதயாவிற்காகத் தங்கள் குருசாமியிடம் (தலைமை புனிதப் பயண வழிகாட்டி) கோருகின்றனர். சுவாமி ஐயப்பன் தனது பக்தர்களுடன் சதயாவில் பங்கேற்கிறார் என்ற நம்பிக்கையின் அடையாளமாக, விருந்தானது முதலில் சுவாமி ஐயப்பனுக்கு விளக்கேற்றி ஓர் இலையில் உணவு பரிமாறுவதன் மூலம் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் விருந்தில் கலந்துகொள்கின்றனர். மாலையில், குளித்த பிறகு, ஐயப்ப பக்தர்கள் மகரவிளக்கு தரிசனத்திற்காக நீலிமலை ஏறுகின்றனர், இத்துடன் தங்கள் சடங்குப் பயணத்தை புதுப்பிக்கப்பட்ட ஆன்மீக வலிமையுடன் நிறைவு செய்கின்றனர்.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top