சபரிமலையின் பதினெட்டாம்படி அல்லது பதினெட்டுப் படிகளின் அடையாள முக்கியத்துவம் மிகவும் பழமை வாய்ந்த நம்பிக்கைகள் மற்றும் புராணங்களில் ஆழந்த ஈடுபாடு கொண்டதாக உள்ளது. தாந்த்ரீக மரபுப்படி, 18 என்ற எண் எட்டு ஜீவாத்மாக்களையும் (உடல் சுயங்கள்) மற்றும் 10 பரமாத்மாக்களையும் (பிரபஞ்ச சுயம்) குறிக்கின்றது. பதினெட்டு என்பது நம் உடல் ஐந்து உயிரணுக்கள், ஆறு நிலைமைகள் மற்றும் ஏழு தாதுக்களைக் குறிக்கின்றது என்பது ஐதீகம். இது பதினெட்டு உலகங்களை, பதினெட்டுப் புராணங்களை, எதிரிகளை அழிக்க சுவாமி ஐயப்பன் பயன்படுத்திய பதினெட்டு ஆயுதங்களைக் குறிக்கின்றது என்ற ஐதீகங்களும் நிலவுகின்றன. இது படைப்பின் உலகத்தைக் கடந்து செல்வதையும் குறிக்கின்றது. இதன் பல பதிப்புகள் உள்ளன. இந்தியாவிற்கு வெளியிலுள்ள பல சமயத்தினருக்கும் கூட 18 என்பது ஒரு புனித எண்ணாக உள்ளது என்பது ஆச்சரியத்திற்குரியது!

சுவாமி ஐயப்பன் தனது பூவுலகத் தந்தையாகிய பந்தளம் மன்னரிடம் தனக்கு 18 படிகள் கொண்ட ஒரு கோயில் கட்டுமாறு வேண்டினார் என ஒரு பிரபலமான கதை தெரிவிக்கின்றது. எனவே, இந்தப் படிகளில் ஏறுவதன் மூலம் பக்தர் ஐந்து புலன்கள் (பஞ்சேந்திரியங்கள் – பார்வை, ஒலி, வாசனை, சுவை மற்றும் தொடுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்ற கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல்), எட்டு உணர்ச்சிகள் (அஷ்டராகங்கள் – காமம் [காதல்], குரோதம் [கோபம்], லோபம் [பேராசை], மோகம் [இச்சை], அசூயை [பொறாமை], டம்பம் [தற்பெருமை], மதம் [அகந்தை] மற்றும் மாச்சர்யம் [போட்டி மனப்பான்மை]), மூன்று தகுதிகள் (முக்குணங்கள் – சத்வம் [தூய்மை], தாமசம் [மந்தம்] மற்றும் ரஜாஸ் [பேரார்வம்]), அறிவு (வித்யா) மற்றும் அறியாமை (அவித்யா) ஆகியவற்றின் மீது ஏறிச் செல்வதோடு அவற்றை வெற்றியும் கொள்கிறார்.

விரதத்தின் விதிகளைக் கடைப்பிடித்து இருமுடி (தலையில் சுமந்து வரும் இரண்டு பகுதிகள் கொண்ட மூட்டை) தரித்து வரும் பக்தர்கள் மட்டுமே புனிதமான பதினெட்டாம்படியைத் தொடுவதற்கான அல்லது அவற்றின் மீது ஏறிச் செல்வதற்கான தகுதியைப் பெறுகின்றனர்.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top