English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
வருடாந்திர சபரிமலை உற்சவத்தை அனுபவியுங்கள்
சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் நடைபெறும் வருடாந்திர கோயில் திருவிழா பக்தர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஆகும். 10 நாள்கள் நடைபெறும் இது மலையாளத்தின் ‘மீனம்’ மாதத்தில் நடத்தப்படுகின்றது, இது தமிழ் மாதமாகிய ‘பங்குனியில்’ (மார்ச் – ஏப்ரல்) வருகின்றது.
கோயில் கொடியேற்றத்தில் இருந்து திருவிழா முறையாகத் தொடங்குகின்றது. திருவிழாவின்போது பல சடங்குகளும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. “ஸ்ரீ பூதபலி,” “உற்சவபலி” போன்றவை இந்தப் பருவத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பூஜைகள் ஆகும்.
சுவாமி ஐயப்பன் ‘சரம்குத்தியை’ வேட்டையாடச் செல்வதாக நம்பப்படுகின்ற சம்பிரதாய ஊர்வலமாகிய ’பள்ளிவேட்டை,’ திருவிழாவின் மனதைக் கவரும் அம்சங்களில் ஒன்றாகும். பம்பையில் நடைபெறும் ‘ஆராட்டு’ என்ற அரச குளியல் மற்றொரு நிகழ்வாகும். இத் திருவிழா சுவாமி ஐயப்பன் பிறந்த நட்சத்திரமாகிய உத்திரம் நட்சத்திர நாளன்று நடத்தப்படுகின்ற ‘பங்குனி உத்திரம்’ உடன் நிறைவடைகின்றது.