கேரளாவில் உள்ள உயர்மதிப்பு கொண்ட புனிதப் பயணத் தலமாகிய சபரிமலைக்கு ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கவும். பக்தர்கள் புனித நீரில் நீராடி தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்கின்ற அமைதியான புனித நதியாகிய பம்பையில் இருந்து தொடங்கவும். பரம்பரை மற்றும் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் விதமாக, மூதாதையரைத் திருப்திப்படுத்துகின்ற பலி சடங்கைக் காணவும். சன்னிதானத்திற்குச் செல்ல மலை ஏறுவதற்கு முன் பம்பை கணபதி கோயிலுக்குச் சென்று ஆசீர்வாதம் பெறவும். குளத்துப்புழா பால சாஸ்தா கோயில், ஆரியங்காவு ஐயப்பன் கோயில் மற்றும் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் ஆகிய கோயில்களில் மெய்சிலிர்க்கச் செய்யும் பக்தி அனுபவத்தைப் பெறவும். வேற்றுமையில் ஒற்றுமைக்கு அடையாளமாக விளங்கும் எருமேலி ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் மற்றும் வாவர் ஜும்மா மசூதியில் நிலவும் செழிப்பான கலாச்சாரத்தை ஆராயவும். சபரிமலையின் இதயமாகிய சன்னிதானத்தில், சுவாமி ஐயப்பனின் தெய்வீக இருப்பை உணரவும். மாளிகைப்புரத்தில் மாளிகைப்புரத்தம்மாளை பயபக்தியுடன் வணங்குவதன் மூலம் உங்கள் புனிதப் பயணத்தை முடித்துக்கொள்ளவும். இந்தப் பயணம் ஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் இயற்கையின் அனுபவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒவ்வொரு புனிதப் பயணிக்கும் ஆழ்ந்த அனுபவத்தை வழங்குகின்றது.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top