English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
சபரிமலை கோயில் ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை என்பது அதன் தனித்துவமாகும். புனிதப் பருவப் பயணம் முக்கியமாக நவம்பர் மாதத்தில் தொடங்கி ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கின்றது. புனிதப் பயணப் பருவத்தின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு ஆகும். இவற்றைத் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாள்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வரும் விஷு தவிர, பெரும்பாலான நாள்களில் கோயில் மூடியே இருக்கின்றது.