ஆயுர்வேதம் - உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒருங்கிணைப்பு
5000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் அழகிய பூமியில் அரும்பிய, ஆயுர்வேதம், வாழ்க்கை மற்றும நீ்ண்ட ஆயுளுக்கான அறிவியலாகும், அதுவே உலகின் மிகவும் பழமையான ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பாகும் மற்றும் அது மருந்து மற்றும் தத்துவத்தின் ஆழ்ந்த எண்ணங்களை ஒருங்கிணைக்கிறது. பண்டைய காலம் தொட்டு உலகெங்கிலும் மனித குலத்தின் ஆரோக்கியமான உடல், மனம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக ஆயுர்வேதம் நின்றுள்ளது. இன்று, அது ஒரு தனிச்சிறப்பான, மருத்துவத்தின் தவிர்க்கமுடியாத கிளையாகவும், உங்கள் உடலின் நீர்மங்களான - வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றின் சமச்சீரான அளவினை அடைவதற்காக அவற்றை நோய் நாடலை சார்ந்து இருக்கும் ஒரு முழுமையான இயற்கை சார்ந்த அமைப்பாகும்.
கேரளா, ஆயுர்வேதத்தின் பூமி
வெளிநாடு மற்றும் சொந்த நாட்டுப் படையெடுப்புகள் மற்றும் இடையூறுகளைக் கடந்து வந்த போதும் துண்டிக்கப்படாத ஆயுர்வேத பாரம்பரியத்தைக் கேரளா கொண்டிருக்கிறது. கேரளாவில் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்துவதற்கான ஒரே தீர்வாக ஆயுர்வேத வைத்தியர்கள் (ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவர்கள்) பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். தொன்மைமிக்க எட்டு வைத்தியக் குடும்பங்கள் (அஷ்ட வைத்தியர்கள்) மற்றும் அவர்களின் வழி தோன்றல்கள் பல நூற்றாண்டுகளாக மாநிலம் முழுவதிற்கும் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ளது போல மாற்று மருத்துவமாக இல்லாமல் கேரளாவில் முதன்மை மருத்துவமாக ஆயுர்வேதம் இருக்கிறது. உண்மையில், இன்று, முழுயைமான அர்ப்பணிப்புடன் இந்த மருத்துவமுறையை பயன்படுத்துகிற ஒரே மாநிலம் கேரளாவாகும்.
மக்களின் சிகிச்சைக்கான ஒரே புகலிடமாக, கேரள வைத்தியர்கள் ஆயுர்வேத கோட்பாடுகளை புரிந்து கொண்டு அவற்றை அன்றாட வாழ்வில் ஆற்றல்மிக்க குணப்படுத்தும் அமைப்புகளில் செயல்திறத்துடன் பின்பற்றுவதற்கு கேரள வைத்தியர்கள் சவால் விடப்பட்டார்கள். இவ்வாறு ஆயுர்வேதத்தின் அனைத்து நவீன செயல்முறைகளும் வழிகாட்டு நெறிகளும் கேரளாவிலும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது.
இயற்கையின் வரப்பிரசாதம்
சமநிலையான தட்பவெட்பம், காடுகளின் இயற்கை வளம் மற்றும் கேரளாவின் குளர்ச்சியான மழைக்கால பருவநிலை ஆயுர்வேதத்தின் குணப்படுத்துகிற மற்றும் மீள்படுத்துகிற பேக்கேஜ்களுக்கு சிறப்பாக பொருந்துகிறது. தொடர்ச்சியான மழைக்காலத்தின் போது 24-28 டிகிரி வெப்பநிலை இருக்கும் பூமியின் சில இடங்களில் கேரளாவும் ஒன்று. காற்றிலும் தோலின் மேற்பரப்பிலும் ஈரப்பதம் இருப்பதால் இயற்கை மருந்துகள் அதிக அளவு சாத்தியத்துடன் செயலாற்றுவதற்கு அதை பொருத்தமான இடமாக ஆக்குகிறது. இந்த பூமி எண்ணற்ற மருத்துவத் தாவரங்களுடன் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆற்றல்மிக்க சிகிச்சைமுறைகளுக்குத் தேவைப்படுகிற ஆயுர்வேத மருந்துகளின் தொடர்ச்சி மற்றும் நிலையானத்தன்மையை வழங்குகிறது. ஒரே மூலிகைகள் ஒரே திறத்துடன் எல்லா பருவகாலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கிறது. வெவ்வேறு மண் உட்கூறுகளைக் கொண்ட இடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த மண்ணின் காரப் பொருட்களின் வளம் பல ஆயுர்வேத மருந்துகளின் செறிவு மற்றும் திறத்தினை மேம்படுத்துகிறது.
கேரளாவில் ஆயுர்வேதத்தின் பயன்கள்
அஷ்டாங்கஹ்ருதயம் என்பது நடைமுறையான, பயன்படுத்துபவர்களுக்கு உகந்த, ஆயுர்வேத விளக்கமாகும், அது வாக்பத்தர் என்னும் மாமுனிவரால் தொகுக்கப்பட்டதாகும், உலகின் பிற பாகங்களில் அரிதாகப் பயன்படுத்தப்படும் அது, கேரளத்தில் விரிவான அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின் முன்னோடிகளான, சாராகா, மற்றும் சுஷ்ருதா ஆகியோரின் நூல்களை விட உயர்வானதாக பல ஆயுர்வேத அறிஞர்களால் கருதப்படும் இதில் பல நவீனகால ஆயுர்வேத வைத்தியர்கள் தேர்ச்சிப்பெற்றவர்களாக இருக்கிறார்கள். கேரளத்தில் கஷாய சிகித்ஸா (கஷாயத்துடனான சிகிச்சை) பல்வேறு சிகிச்சைத் தேவைகளுக்காக நூற்றுக்கணக்கான கஷாயங்களை உள்ளடக்கி ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட வழிகாட்டு நெறியினைக் கொண்டிருக்கிறது. கேரள வைத்தியர்கள் முதலில் அபயங்கத்தின் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் பண்புகளில் முதலில் கவனம் செலுத்துகிறார்கள், அது கிழிகளை அதிகம் பயன்படுத்தவதற்கு வழி வகுக்கிறது. பெருமளவிலான ஆயுர்வேத கல்லூரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உலகின் மற்ற இடங்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால் கேரளாவில் அறிவியல் முறையில் ஆயுர்வேதத்திற்கான பாரம்பரிய ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது.
வாழ்க்கைமுறையில் ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் வெறும் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பு மட்டுமல்ல, கேரளாவில் அது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துடனும் இணைந்த ஒன்றாகும். பக்கவாதத்தால் நடக்க முடியாதவர்கள் நடந்தது, குணப்படுத்த முடியாத நோய்களை குணமாக்கியது போன்ற பல அதிசயங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன, அவை கேரளாவில் வைத்தியர்கள் மீது மதிப்பையும் பிரமிப்பையும் மக்களக்கு ஏற்படுத்துகிறது.
சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.