நிறைய தருணங்களில் வாழ்க்கையை உருவாக்குவதில் மும்முரமாகி, நாம் வாழ்வதையே மறந்துவிடுகிறோம். வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு- இப்படியே நமது தினசரி வழக்கம் நம்மை ஒரு சலிப்பான வட்டத்திற்குள் நழுவவிட்டிருக்கலாம். நம் நிரம்பிய வேலைப்பளுவின் காரணமாக விலைமதிப்பற்ற குடும்ப தருணங்களை நாம் தவறவிட்டிருக்கலாம். நம் பழைய நண்பர்களை நாம் கடைசியாக எப்போது சந்தித்தோம்? இவை அனைத்தையும் ஈடுகட்ட வேண்டிய நேரம் இது. பேக் அப் செய்துவிட்டு, புதிய நினைவுகளில் திளைக்க, உங்களை ஒட்டுமொத்தமாக மீட்டுருவாக்கும் பொத்தானை அழுத்த, கேரளாவுக்கு வாரீர். கேரளா உங்களை அதன் எண்ணற்ற சுற்றுலா வாய்ப்புகளால் திக்குமுக்காட செய்துவிடும். மரகத உப்பங்கழிகள், பசுமையான மேற்குத்தொடர்ச்சி மலைவாசஸ்தலங்கள், கவர்ந்திழுக்கும் வனவிலங்குகள், விண்ணை முட்டும் கொட்டித்தீர்க்கும் நீர்வீழ்ச்சிகள், பரந்த தோட்டங்கள், பசுமையான நெல் வயல்கள், மனங்கவரும் திருவிழாக்கள் மற்றும் மயக்கும் கலை வடிவங்கள். இவை எல்லாவற்றின் பேரெழிலான சங்கமம் கேரளா. மெருகூட்டப்பட்ட எந்தவொரு வால்பேப்பர்களை விடவும் அழகான நிலப்பரப்புகளில் உங்கள் சிந்தை லயிக்க கேரளா உங்களுக்கு அனுமதியளிக்கிறது. அது உங்களை நம் அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விலக்கி வைக்கிறது. உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றிற்கு பேக் அப் செய்து, விரைவில் அடைந்து, நினைவுகளை உருவாக்குங்கள்.
பழைய நினைவுகள் நீங்கள் தவறவிட்ட அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டும்போது, கடவுளின் சொந்த தேசத்தில் சிறந்த புதிய அனுபவங்களை உருவாக்க வேண்டிய தருணம் இது. கேரளாவிற்கு பேக் அப் செய்து, நமது கடற்கரைகள், மலைகள், உப்பங்கழிகள் மற்றும் காடுகளில் நீங்கள் குடும்பத்துடனும் உங்கள் சுயத்துடனும் இழந்த விலைமதிப்பற்ற நேரத்தை ஈடுசெய்யுங்கள்.
வாழ்க்கை ஒரு மந்தமான வழக்கத்திற்கு மாறியதும், உங்கள் இருவருக்கும் இடையேயான அந்த பழைய காதல் தீப்பொறி ஒரு தொலைதூர கனவாக இருக்கும்போது, மூட்டை முடிச்சுகளை பேக்அப் செய்து கேரளாவுக்கு வாருங்கள். கடவுளின் சொந்த தேசத்தின் மலைகள், உப்பங்கழிகள், கடற்கரைகள் மற்றும் காடுகளில் இதயப்பரணில் தூசிபடிந்து கிடக்கும் உங்கள் காதல் நரம்புகளை சிலிர்த்தெழுப்புங்கள்.
உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கையின் பொன்னான, தன்னிகரற்ற தருணங்களை நழுவ விட்டுவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்த அடுத்தநொடி, கேரளாவுக்கு வாருங்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளின் சொந்த தேசத்தின் கடற்கரைகள், மலைகள், உப்பங்கழிகள் மற்றும் காடுகளை விட தாங்கள் இழந்த நேரத்தை மீட்டுருவாக்கம் செய்ய சிறந்த இடம் வேறு எதுவுமில்லை. கேரளாவில் பெறும் உங்கள் குடும்பத்தின் புத்துணர்ச்சி உங்களை மீண்டும் அன்பால் பிணைக்கும்!