கவி சுற்றுச்சூழல் சுற்றுா, கேரள வன மேம்பாட்டு கழகத்தின் திட்டமாகும், அது சமீகாலங்கில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் திட்டம் பல வகைகளில் தனிச்சிறப்பானது மற்றும் இங்கு வரும் பெரும்பான்மையானவர்கள் இயற்கை விரும்பிகள் மற்றும் சாகசச் சுற்றுலா பயணிகள் ஆவர். குறிப்பாக அலிஸ்டர் இன்டர்நேஷனல் என்னும் பெரிய சுற்றுலா நிறுவனம் முன்னணி சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களின் பட்டியலிலும் இந்தியாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களிலும் அதை இணைத்தது முதல், குறுகிய காலத்தில் கவிக்கு வருகை தருபவர்கள் படிப்படியாக அதிகரித்துள்ளனர்.
கவி சுற்றுச்சூழல் சுற்றுலாவின் சிறப்பம்சம் என்னவென்றால் வழிகாட்டிகளாகவும், தோட்டக்காரர்களாகவும், சமையல்காரர்களாகவும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது தான். இது உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள கவி, வருகையாளர்களுக்கு மலையேற்றம், வனஉயிர்களை கவனித்தல், சிறப்பாக கட்டப்பட்டக் கூடாரங்களில் வெளிப்புற முகாமிடுதல், இரவு சஃபாரிகள் போன்ற நடவடிக்கைகளை வழங்குகின்றது.
கவிக்கு செல்லும் சாலைகள் தேயிலைத் தோட்டங்களால் போர்த்தப்பட்டுள்ளது, அது ஒரு புத்துணர்வான ஒரு அனுபவமாக இருக்கும். கவிக்கு செல்லும் வழியில் முண்டக்கய்யம், குட்டிக்கானம், பீர்மேடு மற்றும் வண்டிப்பெரியார் போன்ற பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன, வண்டிப்பெரியாரிலிருந்து கவிக்கு சாலைப் பிரிகிறது.
கவியை சென்றடைந்ததும் ”கிரீன் மேன்ஷன்” என்னும் சுற்றுச்சூழல் தங்குமிடம் தனது பாதுகாப்பு அணைப்பிற்குள் தழுவக் காத்திருக்கிறது. ”கிரீன் மேன்ஷனில்” கவி ஏரி மற்றும்அதன் அருகில் இருக்கும் வனங்களின் கண்கவர் காட்சியை காணலாம். ”கிரீன் மேன்ஷனில்” வழங்கப்படும் தங்குமிடங்கள் தவிர வருகையாளர்கள் மரவீடுகளையும் முயற்சி செய்து பார்க்கலாம் மற்றும் வனப்பகுதிகளில் கூடாரங்களையும் அமைக்கலாம். இங்கே தனிச்சிறப்பான மலையேற்ற அனுபவத்தைப் பபெறலாம், அது பயிற்சிப் பெற்ற உள்ளூர் மக்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது. கவியின் அமைதியான சூழலில் தனிமையை விரும்புபவர்கள் தனிமைய இரசிக்கலாம் அல்லது அமைதியான ஏரி நீரில் படகு பயணம் செய்யலாம் அல்லது வியப்பூட்டு சூரிய அஸ்தமனத்தைக் கண்டு இரசிக்கலாம். வருகையாளர்களுக்கு வழக்கமாக சைவ உணவும் திண்டபண்டங்களும் வழங்கப்படும், அது இந்த இடத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும்.
இந்த இடம் தாவரங்களும் வனவிலங்குகளும் நிறைந்தது. மலைகளும் பள்ளத்தாக்குகளும், வெப்பமண்டலக் காடுகளும், பரந்த புல்வெளிகளும், சோலைகளும், தொடர்ச்சியாக விழும் நீர்வீழ்ச்சிகளும் ஏலக்காய் தோட்டங்களும் இருக்கின்றன. நீலகிரி வரையாடுகளும் சிங்கவால் குரங்குகளும் கவியின் புறப்பகுதிகளில் பெரும்பாலும் காணலாம். கருப்பு வெள்ளை இருவாயன், மரங்கொத்தி மற்றும் மீன்கொத்திகள் உள்ளிட்ட 260க்கும் மேற்பட்ட பறவைகளுடன், கவி பறவையாளர்களுக்கு ஒரு சொர்க்கமாகும்.
கீழே ஆழ்ந்த பள்ளத்தாக்கு மற்றும் காடுகளின் கண்கவர் காட்சியை வேலி வியூ வியப்பூட்டும் காட்சி முனைகள் கவியில் உள்ளன. கிரீன் மேன்ஷனுக்கு பசுமைத் தங்குமிடத்திற்கு அருகில், கொச்சு பம்பா, என்றும் ஒரு முனை இருக்கிறது, இங்கிருந்து நீலகிரி வரையாடுகள் மேய்வதைப் பார்க்கலாம்.
பிரபலமான புனித யாத்திரைத் தலமான, சபரிமலை கவி குறுகிய மலையேற்ற தூரத்தில் இருக்கிறது. இரவு நேரங்களில் நடமாடும் வனவிலங்குகளைப் பார்ப்பதிலும், இரவு சஃபாரிகளிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு குல்லூர், கவி புல்லுமேடு, கொச்சு பம்பா மற்றும் பச்சகானம் வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
கவியின் மற்றுமொரு தனிச்சிறப்பான அம்சம் என்னவென்றால் காடுகளில் முகாமிடுவதாகும். முகாமிடும் இடத்தில் ஒருவர் கூடாரம் அமைக்கலாம், அது இந்திய வனங்களின் அரிதான ஒன்றாகும். இரவின் அமைதியில் அந்தி நீள்கையில், வனவிலங்குகள் அருகில் இருப்பதை உணரலாம், இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. மர உச்சியில் வீடுகளும் உள்ளன அங்கே பறவைகளின் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கலாம்.
கவியில் பழங்குடிகளின் செயல்திறமான ஈடுபாட்டுடன் அதை ஒரு தனிச்சிறப்பான முயற்சியாக ஆக்குகிறது. காடுகள் பற்றிய பாரம்பரிய அறிவுடனும் அதன் வாழ்க்கைமுறையும் சுற்றுப்புறங்களில் அதன் அசல் தன்மையுடன் நிலைத்திருக்க செய்கிறது.
கவி ஒவ்வொரு வருகையாளரையும் தனது மந்திரஜாலத்தால் கட்டிவிடுகிறது மற்றும் அது ஒருவரின் வாழ்நாளில் தவறப்படக் கூடாத நிச்சயமான ஒரு இடமாக இருக்கிறது. கவி அசலான ஒன்று, அது வனத்திற்கு சொந்தமானது, இது தங்களின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான ஒவ்வொரு வருகையாளருக்குமான ஒரு நினைவூட்டலாகும். இந்த நினைவூட்டல் கவியை வருங்காலங்களில் உயர்த்திப்பிடிக்கும்.
கவி பேக்கேஜ் DTPC பத்தனம்திட்டாவால் வழங்கப்படுகிறது. இங்கே கிளிக் செய்யவும்.
அருகாமையில் உள்ள இரயில் நிலையம்: கோட்டயம் சுமார் 114 கிமீ அருகாமையில் உள்ள விமானநிலையம் : மதுரை விமான நிலையம் (தமிழ்நாடு) சுமார் 140 கிமீ மற்றும் கொச்சி சர்வதேச விமானநிலையம், சுமார் 190 கிமீ
அமைவிடம்பரப்பாங்கு : 9.437208, நெட்டாங்கு: 77.166066
வரைபடம்சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.