குமரகம் கிராமம், வெம்பநாடு ஏரியின் சிறு தீவுகளின் ஒரு தொகுதியாகும் மற்றும் அது குட்டநாடு பகுதியின் ஒரு பாகமாகும். இங்குள்ள பறவைகள் சரணாலயம் 14 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது, அது புலம்பெயரும் பறவைகளுக்கு விருப்பமான இடம் மற்றும் பறவையியலாளர்களுக்கு சொர்க்கம். வெண்குருகுகள், பாம்புதாராக்கள், நாரைகள், காட்டு வாத்துகள், நீர்வாழ் பறவைகள், குயில், காட்டு வாத்து மற்றும் புலம் பெயரும் சைபீரிய கொக்கு போன்ற பறவைகள் கூட்டமாக வரும் மற்றும் பார்வையாளர்களை கவரும்.
ஒரு மயங்கச் செய்கிற காயல் தலமான, குமரகம் வேற பிற பொழுது போக்கு தேர்வுகளையும் வழங்குகிறது. படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் வசதிகள் தாஜ் கார்டன் ரெட்ரீட், என்கிற ரெஸார்ட் ஆக மாறியிருக்கும் பழைய பங்களாவில் கிடைக்கப் பெறுகிறது.
கேரள சுற்றுலா மேம்பாட்டுக்கழகத்தின் ரெஸார்ட் ஆன வாட்டர்ஸ்கேப்ஸ், முட்டுக்கொம்புகளின் மேல், தென்னந்தோப்புகளுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் சுதந்திரமான காட்டேஜ்களை வழங்குகிறது, அதில் காயல்களின் பரந்தகாட்சிகளைக் காணலாம். படகு வீடுகள் மற்றும் பாரம்பரிய கெட்டுவல்லங்களை (நெல் தெப்பங்கள்) உள்ளடக்கிய விடுமுறைப் பேக்கேஜ்கள் சிறந்த அனுபவங்களை வழங்குகின்றன.
குமரகம் பற்றி மேலும் படியுங்கள்.
அருகாமை இரயில் நிலையம்: கோட்டயம், சுமார் 13 கிமீ அருகாமை விமான நிலையம்: கொச்சி சர்வதேச விமான நிலையம், சுமார் 94 கிமீ
அமைவிடம்பரப்பாங்கு: 9.617119, நெட்டாங்கு: 76.429482
புவியியல் தகவல் வரைபடம்சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.