மூணாறு

 

முதிரப்புழ, நல்லதண்ணி, மற்றும் குண்டலா என்னும் மூன்று மலைகள் இணைப்பில் மூணாறு எழுந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேலே 1,600 கி.மீ. இருக்கும் இந்த மலைவாசஸ்தலம் தென்னிந்தியாவில் முன்னாள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. பரந்த தேயிலைத் தோட்டங்கள், அழகிய நகரங்கள், முறுக்குப் பாதைகள், மற்றும் விடுமுறை வசதிகள் இந்த இடத்தை ஒரு புகழ்பெற்ற ஓய்விடமாகிறது. காடுகளில் காணப்படும் இங்கே காடுகள் மற்றும் புல்வெளிகளில் காணப்படும் கவர்ச்சியான தாவரங்களில் நீலக்குறிஞ்சி, இந்த  மலைகளை பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மூடுகிறது, அது அடுத்து 2018ல் பூக்கும். மூணாறு தென்னந்தியாவின் உயரமான சிகரமான 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடியைக் கொண்டிருக்கிறது, அது மலையேற்றத்திற்கான பொருத்தமான இடமாகும்.

மூணாறு கவர்ந்திழுக்கும் மலைவாசஸ்தலத்தினை அனுபவிப்பதற்காக போதுமான வாய்ப்புகளை வழங்குகிற மூணாறிலும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் இருக்கும் தேர்வுகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

இரவிகுளம் தேசியப்பூங்கா

மூணாறுக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களில் இரவிகுளம் தேசியப்பூங்காவும் ஒன்று. இந்தப் பூங்கா நீலகிரி வரையாடு என்படும் அருகி வரும் விலங்கிற்கு பெயர்பெற்றது. 97 சதுர கி.மீ. பரப்பளவு விரிந்துள்ள இந்தப் பூங்கா, பல்வேறு அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகும். மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும், மூடுபனியினால் போர்த்தப்பட்டிருக்கும் தேயிலைத் தோட்டங்களின் கண்கவர் காட்சியை பூங்கா வழங்குகிறது. நீலக்குறிஞ்சிகள் பூத்திருப்பதன் விளைவாக சரிவுகளில் நீல கம்பளம் விரித்தாற்போல இருக்கும் காலங்களில் இந்த பூங்கா ஒரு முக்கியமான ஸ்தலமாக ஆகிவிடும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூக்கும் இந்தத் தாவரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்த பகுதியில் ஆண்டு முழுவதும் பூத்திருக்கும்.

ஆனைமுடி சிகரம்

இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ள ஆனைமுடி சிகரம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே உயரமான சிகரம் இது தான், 2700 மீட்டர் உயரம் கொண்டது. இரவிகுளத்தில் உள்ள வன மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் அனுமதிப் பெற்று இந்த சிகரத்தில் ஏறலாம்.

மாட்டுப்பெட்டி

பார்வையாளர்கள் வருகைத்தரும் மற்றொரு முக்கிய இடம் மூணாறு நகரத்திலிருந்து 13 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் மாட்டுப்பெட்டியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மாட்டுப்பெட்டி அதன் கல்கட்டு அணை மற்றும் அழகிய ஏரிக்காக புகழ்பெற்றது, அது சுற்றியுள்ள மலைகள் மற்றும் நிலபரப்பினை அனுபவிப்பதை இயலச் செய்கிற ஒரு ஆனந்தமான படகு சவாரியையும் வழங்குகிறது. இந்தோ-ஸ்விஸ் கால்நடை திட்டத்தினால் நடத்தப்படும் பால்பண்ணைக்கும் புகழ்பெற்றது, அங்கு வெவ்வேறு உயர் இரக பசுக்கள் பராமரிக்கப்படுவதைக் காணலாம்.

பள்ளிவாசல்

பள்ளிவாசல் மூணாறில் உள்ள சித்திரப்புரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, அது கேரளாவின் முதல் நீர்மின் திட்டமாகும். அது ஒரு நிறைந்த அழகுள்ள இடம் மற்றும் பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் பார்வையாளர்களுக்கு விருப்பமான பிக்னிக் இடமுமாகும்.

சின்னக்கனால் & ஆனையிறங்கல்

மூணாறு நகரத்திற்கு அருகில் சின்னக்கனாலும் அதன் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சி என்று அறியப்படுகிற அது, கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் செங்குத்தானப் பாறையிலிருந்து கொட்டுக்கிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் கண்கவர் காட்சிகள் செறியப்பெற்றுள்ளது. சின்னக்கனாலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரம் பயணித்தால் நீங்கள் ஆனையிறங்கலை அடையலாம். ஆனையிறங்கல், மூணாறிலிருந்து 22 கிமீ தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பசுமையான விரிப்பாகும். நிறைய நீர்த்தேக்கங்களினூடே ஒரு மறக்க முடியாத அனுபவம். ஆனையிறங்கல் அணை தேயிலைத் தோட்டங்களும் பசுமைக்காடுகளும் சூழ்ந்துள்ளது.

டாப் ஸ்டேஷன்

டாப் ஸ்டேஷன், கடல் மட்டத்திலிருநது 1700 மீட்டர் உயரத்தில் மூணாறிலிருநது 32 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. அது மூணாறு – கொடைக்கானல் சாலையில் உயரமான முனையாகும். அண்டை மாநிலமான தமிழநாட்டின் பரந்த இயற்கைக் காட்சியை அனுபவிப்பதற்காக டாப்ஸ்டேஷனுக்கு வருகைத் தருகிறார்கள். விரிந்த பரப்பளவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூப்பதை அனுபவிப்பதற்கு மூணாறில் ஒரு முக்கியமான இடங்களில் ஒன்றாகும் இது.

தேயிலை அருங்காட்சியகம்

தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்று வரும் போது, மூணாறு தனக்கென்று ஒரு மரபினைக் கொண்டிருக்கிறது. இந்த மரபினை கருத்தில் கொண்டும் கேரளாவின் உயர்ந்த இடங்களில் தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் சில அற்புதமான மற்றும் சுவாரசியமான அம்சங்களைப் பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காகவும், மூணாறில் டாடா டீயினால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலைக்கென்று ஒரு தனிச்சிறப்பான ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த தேயிலை அருங்காட்சியகம் கலைப்பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் இயந்திரங்களை காட்சிக்கு வைத்துள்ளது; இவை அனைத்தும் மூணாறில் தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றிய ஒரு கதையைக் கொண்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகம் டாடா டீயின் நல்லத்தண்ணி எஸ்டேட்டில் அமைந்துள்ளது மற்றும் அது பார்ப்பதற்கான மதிப்பினைக் கொண்டுள்ளது.

மூணாறு

மூணாறு, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஒரு மலைவாசஸ்தலம், வருகைத் தருவதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடமாகும். முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும் மூன்று மலை நீரோடைகளின் சங்கம இடத்தில் அமைந்துள்ளது - மேலும், ”மூணாறு” என்ற வார்த்தையும் மலையாளத்தில் மூன்று ஆறுகள் என்று பொருள்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைத்துள்ள மலைவாசஸ்தலம் காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை ஓய்விடமாக இருந்தது. ஆங்கில கன்ட்ரி காட்டேஜ்களின் வடிவத்தில் மூணாறு நகரத்தில் காலனிய சுவடுகள் இன்னும் உயர்ந்து நிற்கின்றன. கன்னிக்காடுகள், வனாந்தரங்கள், உருட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் மூணாறில் பயணியருக்கு கிடைக்கும் சிறந்த விடுமுறை அனுபவத்தின் பகுதிகளாகும். மூணாறு நீலக்குறிஞ்சிக்குப் பெயர் பெற்ற ஒன்று. அரிய மலர் வகையான இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும். மூணாறில் ”குறிஞ்சிப்பருவம்” ஒரு கண்கொள்ளாக்காட்சி, நீலக்குறிஞ்சி மலர்களால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்திருக்கும்.

அங்கே செல்வதற்கு

அருகாமையில் உள்ள இரயில்நிலையம்: ஆலுவா சுமார் 108 கி.மீ. மற்றும் அங்கமாலி சுமார் 109 கி.மீ. அருகாமையில் உள்ள விமானநிலையம் : கொச்சின் சர்வதேச விமானநிலையம், ஆலுவா-மூணாறு சாலை வழியாக சுமார் 108 கி.மீ.

அமைவிடம்

பரப்பாங்கு : 10.091234, நெட்டாங்கு: 77.060051

புவியியல் தகவல்

மழைப்பொழிவு: 275 செ.மீ.

வரைபடம்


District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close