பாலக்காடு மாவட்டத்தின் நென்மாரா நகரத்தில், மேகங்கள் தவழும் கம்பீரமான நெல்லியாம்பத்தி மலைகள் பார்க்க வேண்டியவை. மலைகளின் உயரம் தோராயமாக 467 மீ முதல் 1572 மீ வரையாகும் மற்றும் அதனைப் பார்ப்பவர்களுக்கு முற்றிலும் மன அமைதித்தரும். நெல்லியாம்பதிச் சென்றடைவதற்கு நென்மாறவிலிருந்து போத்துண்டி அணை நோக்கி செல்லும் ரோட்டு வழியாகச் செல்ல வேண்டும். நெல்லியாம்பதிச் செல்லும் வழியில் 10 சிறிய வளைவுகளை நாம் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
போத்துண்டி அணை படகு சவாரிக்கான வசதியுள்ள அழகிய அணை மற்றும் பிக்னிக்கிற்குமான அருமையான தேர்வாகும். சுற்றுலா சென்று வருவதற்கு தேர்வு செய்யப்படவேண்டிய அருமையான இடமாகவும் இது உள்ளது. கணவாயாக இருப்பதால் அதன் சாலை நெல்லியாம்பதி வரை வளைந்து வளைந்து செல்கிறது. சில இடங்களிலிருந்து பரந்த பாலக்காடு மாவட்டத்தையும் அதன் பரந்த நெல் வயல்கள் பச்சைக்கம்பளம் விரித்தது போல் இருப்பதையும் கண்டு மகிழலாம். இந்தப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் புவியியல் அமைப்பின் இயற்கை நிகழ்வான பாலக்காடு கணவாய் ஒரு அருமையான காட்சியைத் தருகிறது. இதிலிருந்து பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டின் அழகு காட்சிகளையும் கண்டு மகிழலாம்.
அங்கிருந்து சற்றுமேலே சென்றால் பயிர்த்தொழிலில் ஆர்வம் உடையவர்கள் தனியாரால் நிர்வகிக்கப்படும் பண்ணைகளையும் வெவ்வேறு வேளாண் குழுமங்களால் மேலாண்மை செய்யப்படும் பரந்த தேயிலை எஸ்டேட்களையும் கண்டு மகிழலாம். நெல்லியாம்பதி குன்றுகள், ஆரஞ்சு பயிர் வேளாண்மைக்குப் பெயர் பெற்றவை ஆகும்.
தனியார் ஓட்டல்கள் மற்றும் ரெஸார்ட்கள், நெல்லியாம்பதி மலை மேல் செல்லுகையில் ஒருவர் காணலாம். பலகப்பாண்டியில் எஸ்டேட்டில் உள்ள உச்சியை அடைவதற்கு முன்னால் மேல் நோக்கு செல்லும்போது உயிர்-பண்ணைகள் இங்கே அமைதிப்பதை காணலாம். எஸ்டேட்டில் விசித்திரமான ஒரு பங்களா இருக்கிறது, அது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது, பிறகு ஒரு தனியார் ரெஸார்ட்டாக மாற்றப்பட்டது. கைக்காட்டியில், ஒரு சமுதாயக்கூடம் உள்ளது. அது நடைப் பயணத்திற்கான துவக்க இடமாக பயன்படுத்தப்படுகிறது.
பலகப்பாண்டியிலிருந்து சற்று தூரத்தில் சீதார்குண்டு என்னும் இடத்தில் பள்ளத்தாக்கின் அழகானத் தோற்றத்தைக காணலாம் மற்றும் 100 மீ உயரமுள்ள ஒரு நீர் வீழ்ச்சி கவர்ந்திழுக்கும். பலகப்பாண்டியிலிருந்து, நடந்தோ அல்லது ஜீப் மூலமாகவோ மாம்பாராவுக்கு சென்றடையலாம்; நெல்லியாம்பதியில் வியக்கவைக்கு மற்றுமொரு முகட்டுப் பகுதியாகும் அது. பலகப்பாண்டியிலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் தேயிலை, ஏலக்காய் மற்றும் காபித் தோட்டங்கள் அருகில் உள்ள மலைகளில் இந்திய காட்டெருமைகள், யானைகள், சிறுத்தைகள், பெரிய அணில்கள் முதலியவற்றைப் பார்ப்பதற்கும் இயலும் மற்றும் பறவையாளர்களுக்கு அது ஒரு சொர்க்கமாகும்.
அருகாமை இரயில்நிலையம் : பாலக்காடு, சுமார் 56 கி.மீ.; திருச்சூர் மற்றும் சோரனூர் சுமார் 77 கி.மீ. அருகாமை விமானநிலையம் : கோயம்புத்தூர் சர்வதேச விமானநிலையம் (தமிழ்நாடு), பாலக்காட்டிலிருந்து சுமார் 55 கி.மீ.
அமைவிடம்பரப்பாங்கு: 10.538952, நெட்டாங்கு: 76.69364
வரைபடம்சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.