கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் கிழக்குக் கோட்டைக்குள்ளே அமைந்துள்ளது விஷ்ணு பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில். இந்தக் கோவில் கேரளா மற்றும் திரவிடக் கட்டடக் கலைப் பாணியின் கலவையை கொண்டது. அது உலகின் பணக்கார கோவிலாக நம்பப்படுகிறது.
ஸ்ரீபத்மநாப சுவாமி கோவில் வரலாறு 8ம் நூற்றாண்டை சார்ந்தது. இந்தியாவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். தமிழ் ஆழ்வார்களால் (முனிவர்கள்) பாடல்களில் குறிப்பிடப்பட்ட விஷ்ணு பகவானின் புனித தலங்களாகும் இந்த திவ்ய தேசங்கள். இந்த கோவிலின் மூலக்கடவுள் விஷ்ணு பகவான் ஆவார், அவர்கள் பாம்பணையில் அனந்த சயனத்தில் இருக்கிறார்.
திருவாங்கூர் அரசர்களில் குறிப்பிடத்தக்கவரான மார்த்தாண்ட வர்மா இந்த கோவிலின் முக்கிய புனரமைப்பு வேலைகளை செய்தார், அதன் விளைவாக ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலின் கட்டமைப்பு உள்ளது. கோவிலில் முரஜபம், மற்றும் பத்ரதீப திருவிழாக்கள் மார்த்தாண்ட வர்மாவால் அறிமுகப்படுத்தப்பட்டன. முரஜபம் என்பது தொடர்ச்சியாக பிரார்த்தனைகளை உச்சாடனம் செய்வதாகும், ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தப்படுகிறது.
1750ல், மார்த்தாண்ட வர்மா திருவாங்கூர் சமஸ்தானத்தை விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணித்தார். மார்த்தாண்ட வர்மா விஷ்ணு பகவான் சார்பாக அரசகுடும்பம் நாட்டை ஆட்சி செய்யும் என்று வாக்குக் கொடுத்தார் மற்றும் அவருடைய வழிதோன்றல்களும் பத்மநாப தாசர்களாக அல்லது பத்மநாப பகவானின் சேவகர்களாக சேவையாற்றி வந்தனர். அது முதல் திருவாங்கூர் அரசர்கள் ஒவ்வொருவரின் பெயருக்கு முன்னால் பத்மநாப தாசர் என்கிற பட்டம் சேர்ந்து கொண்டது. பத்மநாப சுவாமிக்கான திருவாங்கூர் சமஸ்தானத்தின் நன்கொடை த்ரிப்படிதானம் என்று அறியப்படுகிறது.
கேரளாவின் தலைநகரான் திருவனந்தபுரம் தனது பெயரை ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலின் முதன்மை கடவுளின் பெயரால் வழங்கப்படுகிறது, அவர் அனந்தர் (சர்பத்தின் மேல் சயனித்திருப்பவர்). ”திருவனந்தபுரம்” என்பது ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமியின் பூமி என்று பொருள்படுகிறது.
பரசுராம க்ஷேத்திரங்களில் ஒன்றில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஸ்கந்த புராணம், மற்றும் பத்மபுராணம் போன்ற நூல்களில் இதற்கான குறிப்புகள் உள்ளன. பத்ம தீர்த்தம் எனப்படும் குளத்திற்கு அருகில் இந்த கோவில் அமைந்துள்ளது. இதன் பொருள் ”தாமரை நீரூற்று” என்பதாகும்.
திருவிதாங்கூர் சமஷ்தான அரசகுடும்பதின் தலைமையில் செயல்படும் அறக்கட்டளையால் இந்த கோவில் செயல்படுகிறது.
ஸ்ரீ பத்மநாபசுவாமியின் மூல விக்கிரகம் 12008 சாளக்கிராமங்களால் ஆனதாக குறிப்பிடப்படுகிறது, அவை நேபாளத்தில் உள்ள கந்தகி நதிக்கரையைிலிருந்து எடுத்து வரப்பட்டவையாகும். கர்ப்பகிரஹம் அல்லது ஸ்ரீபத்மநாப சுவாமிக் கோவிலின் மூலஸ்தானம் ஒரு கல்மேடையில் அமைந்துள்ளது, மூலவிக்கரகம் அதன் மேல் 18 அடி நீளத்திற்கு இருக்கிறது. இதை மூன்று வெவ்வேறு வாயில்களில் இருந்து தரிசிக்கலாம். தலையும் மார்பும் முதல் வாயிலில் இருந்தும், கைகள் இரண்டாவது வாயிலில் இருந்தும் பாதம் மூன்றாம் வாயிலில் இருந்தும் தரிசிக்கப்படலாம்.
அழகியல் மற்றும் கட்டடக்கலைகோவிலின் கட்டடக்கலை அதன் கல் மற்றும் வெண்கல வேலைப்பாடுகளுடன் இருக்கிறது. கோவிலின் உள்கட்டமைப்பு அழகிய ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்படுகிறது. அவற்றில் சில இயற்கை வடிவ அளவிற்கான சயனத்திருக்கும் மகாவிஷ்ணு, நரசிம்ம சுவாமி (பாதி சிங்கம், மீதி மனித வடிவிலான மகாவிஷ்ணுவின் அவதாரம்), கணபதி மற்றும் கஜலக்ஷ்மி ஒவியங்களாகும். கோவிலின் த்வஜ ஸ்தம்பத்தில் (கொடி மரம்) சுமார் 80 அடி உயரம் கொண்டது மற்றும் தங்கம் பூசப்பட்ட செப்புத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது. இந்தக் கோவில் பலிப்பீட மண்படம் மற்றும் முக மண்டபத்தின் சில சுவாரசியமான கட்டமைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை இந்துக் கடவுகள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மண்டபங்களாகும். கவனத்தை ஈர்க்கும் மற்றொரு கட்டமைப்பு நவக்கிரஹ மண்டபமாகும், இதன் கூரையில் ஒன்பது கோள்களும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
தாழ்வாரம்கோவிலின் கிழக்குப் பக்கம் நீண்டுள்ள தாழ்வாரம் பரந்த தாழ்வாரமாகும், இது 365 சக்கரங்களையும் கால்பங்கு சிற்பங்களையும் கொண்டுள்ளது - கிரானைட் தூண்களில் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்குப் பக்கத்தில் முதன்மை வாயிலின் கீழே தரைதளத்தில் நாடக சாலை (நாடக அரங்கம் என்று பொருள்) உள்ளது, அதில் கதக்களி என்னும் பாரம்பரிய நடனம், கோவிலின் வருடாந்திர பத்து நாள் திருவிழாவின் போது, மலையாள மாதங்களான் மீனம் மற்றும் துலாம் மாதங்களில் நடத்தப்படும்.
ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் வழிபாட்டு நேரம்காலை: காலை 3.30 முதல் 4.45 வரை (நிர்மால்ய தரிசனம்) காலை 06:30 முதல் 07:00 வரை காலை 8.30 முதல் 10:00 வரை காலை 10:30 முதல் 11:10 வரை காலை 11:45 முதல் 12:00 வரை மாலை: மாலை 5.00 முதல் 6.15 மணி வரை மாலை 6.45 முதல் 7.20 மணி வரை
தயவு செய்து திருவிழாக்காலங்களில் வழிபாட்டு நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கோவிலில் பின்பற்றப்படும் உடப்பு நெறிகோவிலினுள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோவிலின் உள்ளே நுழைவதற்கு பின்பற்ற வேண்டிய கடுமையான உடுப்பு நெறி உள்ளது. ஆண்கள் வேட்டி அணிய வேண்டும் (இடுப்பை சுற்றி குதிகால்கள் வரை) எந்த வகையான சட்டையும் அணியக்கூடாது. பெண்கள் சேலை, முண்டம் நெறியதும் (ஜோடி-முண்டு), பாவடை மற்றும் ரவிக்கை அல்லது தாவணி அணிந்து கொள்ள வேண்டும். கோவிலின் வாயில் வேட்டிகள் வாடகைக்கு கிடைக்கின்றன. பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு இப்போது கோவில் நிர்வாகிகள் பேண்டுகள் அல்லது சுடிதார்களுக்கு மேலே வேட்டி அல்லது முண்டு அணிந்து கொள்ள அனுமதிக்கிறார்கள். மேலும் தகவல்களுக்கு www.sreepadmanabhaswamytemple.org-ஐ பார்க்கவும்.
இங்கே செல்வதற்குஅருகாமை இரயில் நிலையம்: திருவனந்தபுரம் சென்ட்ரல், சுமார் 1 கிமீ தூரத்தில் உள்ளது அருகாமையில் உள்ள விமானநிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம், சுமார் 6 கிமீ தூரத்தில் உள்ளது.
அமைவிடம்பரப்பாங்கு: 8.483026, நெட்டாங்கு : 76.943563
வரைபடம்சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.