வர்க்கலா கடற்கரை

 

அமைவிடம்: திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து 51 கி.மீ வடக்கேயும் தெற்கு கேரளத்தின் கொல்லத்திற்கு தெற்கே 37 கி.மீ-லும் அமைந்திருக்கிறது.

வர்க்கலா, ஒரு நிசப்த்மான அமைதியான குக்கிராமம், திருவனந்தபுரம் மாவட்டத்தின் புறப்பகுதியில் அமைந்துள்ளது. அது அழகிய கடற்கரை, 2000 வருடப் பழமையான விஷ்ணு கோயில் மற்றும் கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கும் சிவகிரி மடம் என்னும் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை உள்ளடக்கி இருக்கிறது.

பாபநாசம் கடற்கரை (வர்க்கலா கடற்கரை என்றும் அழைக்கப்படுவது), வர்க்கலாவிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, அது இயற்கை சுனைக்கு பெயர்பெற்ற ஒன்றாகும். அது மருத்துவ மற்றும் குணமாக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்தக் கடற்கரையில் முழுக்குப் போடுவது உடலின் அசுத்தங்களையும் ஆன்மாவின் அனைத்துப் பாவங்களையும் தீர்ப்பதாக நம்பப்ப்படுகிறது; எனவே தான் இதன் பெயர் ”பாபநாசம் கடற்கரை” ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலான ஜனார்த்தனசுவாமி கோயில் கடற்கரையை நோக்கிய குன்றுகள் மீது, குறுகிய தூரத்தில் நின்றிருக்கிறது. மத சீர்திருத்தவாதியும் த்த்துவஞானியுமான ஸ்ரீநாராயணகுரு (1856-1928) துவங்கிய சிவகிரி மடம் அருகில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் நாராயண குரு சமாதி உள்ள இடமான இங்கு (இறந்த இடம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவகிரி புண்ணிய பயண நாட்களான டிசம்பர் 30லிருந்து ஜனவரி 1-ம் நாள் வரை இங்கு வந்து கூடுவர். ஸ்ரீ நாராயண குரு அவர்கள் 'ஒன்றே குலம், ஒரே மதம், ஒருவரே கடவுள்' என்று சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த சாதிமுறையை கிழித்தெறிய பிரச்சாரம் செய்தவர் ஆவார்.

வர்க்கலா வில் சுற்றுலா பயணிகளுக்காக அருமையான தங்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. மிகவும் விரைவாக வளர்ந்து வரும் பல ஆயுர்வேதிக் மசாஜ் மையங்கள் அங்கு உள்ளன.

கவருவன : கடற்கரை, மினரல் வாட்டர் நீரூற்று, சிவகிரி முத் மற்றும் 2000 வருடம் பழைமையான விஷ்ணு கோவில்.

வர்க்கலா பற்றி மேலும் படியுங்கள்.

இங்கே செல்வதற்கு

அருகாமை இரயில் நிலையம்: வர்க்கலா, சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ளது அருகாமையில் உள்ள விமானநிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம், சுமார் 57 கிமீ தூரத்தில் உள்ளது.

அமைவிடம்

பரப்பாங்கு: 8.740543, நெட்டாங்கு: 76.716785

வரைபடம்

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close