கேரளாவில் காயல்கள் ஊடே படகுவீட்டில் எப்போதாவது பயணித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அவ்வாறு செய்வதை உறுதி செய்யுங்கள். எங்களின் மாநிலம் வழங்கும் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் தனிச்சிறப்பான அனுபவங்களில் எளிதான ஒன்றாகும்.
தற்கால படகுவீடுகள் பெரியவை, ஓய்வானப் பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் மெதுவாக நகரும் ஓடங்களாகும், உண்மையில் பழங்காலக் கெட்டுவல்லங்களின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். அசல் கெட்டுவல்லங்கள் அரிசி மற்றும் நறுமணப்பொருட்களை டன் கணக்கில் ஏற்றிச் செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு நிலையான கெட்டுவல்லம் 30 டன்கள் வரை சரக்குகளை குட்டநாட்டிலிருந்து கொச்சித் துறைமுகத்திற்கு ஏற்றி செல்லக்கூடியவை.
மலையாளத்தில் கெட்டு என்பது ”குடியிருப்பு கட்டமைப்புகளையும்”, வல்லம் என்பது ”படகையும்” குறிக்கிறது. இந்த படகுகள் மரப்பலகைகள் மீது கூரை வேயப்பட்டவையாகும். இந்த படகு பலா மரக்கட்டைகளால் செய்யப்பட்டு தென்னை நாரினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். இது பிறகு வேகவைக்கப்பட்ட முந்திரி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பு பிசினால் பூசப்படுகிறது. கவனமான பராமரிப்புடன், ஒரு கெட்டுவல்லம் தலைமுறைகளுக்கு நீடித்திருக்க முடியும்.
கெட்டுவல்லத்தின் ஒரு பகுதி மூங்கில் மற்றும் தேங்காய் நாரினால் மூடப்பட்டிருக்கும், அது படகோட்டிக்கு ஓய்வறையாகவும் சமையலறையாகவும் இருக்கும். படகிலேயே சாப்பாடு தயாரிக்கப்படும், அதற்கு துணையாக காயல்களில் இருந்து புதிதாகப் பிடிக்கப்பட்டு சமைக்கப்பட்ட மீன்களும் இருக்கும்.
நவீன டிரக்குகள் இந்த போக்குவரத்து அமைப்பினை மாற்றீடு செய்ததும், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த படகுகளை வைத்துக்கொள்வதற்கான ஒரு புதிய வகையை மக்கள் கண்டறிந்தார்கள். பயணிகளுக்கான சிறப்பு அறைகளை கட்டுவதன் மூலம், இந்த படகுகள் கிட்டத்தட்ட அழிவிலிருந்து காக்கப்பட்டு தற்போதைய பிரபலமான பயணத்திற்கு முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டன.
இன்று இவை காயல்களில் ஒரு பரிச்சயமான காட்சியாகும் மற்றும் ஆலப்புழாவில் மட்டும், 500க்கும் அதிகமான படகுவீடுகள் உள்ளன.
கெட்டுவல்லங்களை படகு வீடுகளாக மாற்றும் போது, இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்துவதற்கு கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மூக்கில் பாய்கள், குச்சிகள் மற்றும் பாக்கு மரங்கள் கூரைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, தேங்காய் நார் பாய்கள் மற்றும் மரப்பலகைகள் தரைக்காகவும் தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் நார்கள் படுக்கைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம், விளக்கிற்காக சோலார் பேனல்களும் விரும்பப்படுகின்றன.
இன்று, படகு வீடுகள் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைகள், நவீன கழிப்பறைகள், வசதிமிக்க வரவேற்பறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு பால்கனியையும் உள்ளிட்டு நல்ல ஓட்டல் அறைகள் போன்ற வசதிகளுடன் கூடியனவாக இருக்கின்றன. மரத்தின் வளைந்த கூரை பாகங்கள் அல்லது பின்னப்பட்ட பனையோலைகளின் நிழல் தருகின்றன மற்றும் இடையூறில்லாமல் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. பெரும்பாலான படகுகள் உள்ளூர் துடுப்புகார்களால் செலுத்தப்படும் போது, சில படஙகுகளில் 40 எச்பி இன்ஜின்களும் இருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று படகுவீடுகளை ஒன்றாக இணைத்து படகு இரயில்களும் உருவாக்கப்பட்டுள்ளன, பெரியக் குழுக்களான பார்வையாளர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
படகுவீடுகளின் சவாரியில் விந்தையானது என்னவென்றால் இது வரை தொடப்பட்டிராத மற்றும் அணுகுப்பட்டிராத ஊரக கேரளாவின் காட்சிகளை, நீங்கள் ஓய்வாக அதனூடே மிதந்து செல்லும் போது உங்களுக்கு வழங்குகிறது.
சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.