கேரளா ஒரு பார்வை

 

மேற்கில் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, கிழக்கில் மேற்குத்தொடர்ச்சிமலை உயர்ந்திருக்க,  44 ஒன்றுடன் ஒன்று இணைந்த ஆறுகளுடன், ஆசியாவின் மிகவும் விரும்பப்படுகிற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா தனிச்சிறப்பான புவியியல் அம்சங்களுடன் இருக்கிறது. அழகான நீண்ட கடற்கரைகள், அமைதியான பசுமைக் காயல்கள், பசுமைப் போர்த்திய மலைவாழிடங்கள் மற்றும் கவர்ச்சியான வனஉயிர்கள், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கடந்து  செல்லும் போது உங்களுக்காக காத்திருக்கும் சில அதிசயங்களாகும். இன்னும் என்ன, இந்த அழகிய இடங்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே இரண்டு மணி நேரப் பயணத் தூரத்திற்குள் இருக்கிறது –  இந்த ஒற்றைப் பயனை இந்த பூமியில் வேறு எதுவும் வழங்கிவிட முடியாது.

கேரளா ஒரு முன்னோடியாக பெருமைக் கொள்வது ஒரு கலாச்சாரம் தன்னுடைய கடந்த காலத்தை மதிக்கிறது என்பதற்காக மட்டுமல்ல அது வளர்ச்சி முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுகிறது என்பதற்காகவும் தான். நூறு சதவீத கல்வியறிவு, உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள், மற்றும் உயர்ந்த வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதங்கள் ஆகியன மாநிலத்தின் மக்கள் பெருமைக்கொள்கிற மைல்கற்களில் சிலவாகும்.

புவியியல்

புவியியல்

கேரளா மூன்று புவியியல் ப குதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: தொடர்ச்சியான மலைகளில் இருந்து நிலப் பகுதிகளுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கீழே சரியும் மேட்டு நிலங்கள், பள்ளத்தாக்குகளில் இருந்து அழகிய காயல்கள், இணைந்திருக்கும் கால்வாய்கள் மற்றும் ஆறுகளுடனான பிளவுப்படாத 580 கிமீ நீள கடற்கரைகள். காட்டு நிலங்கள் அடந்த காடுகளால் மூடப்பட்டுள்ளன, அதே சமயம் மற்றொரு பிராந்தியம் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் அல்லது ஏதோ ஒரு வகையான சாகுபடியுடன் நிறைந்திருக்கின்றன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளமான பசுமையில் மூழ்கி எல்லா நேரங்களிலும் மிகவும் அமைதியான அனுபவத்தை உறுதி செய்கிறது.

பருவங்கள்

பருவங்கள்

ஆண்டு முழுவதும் இனிமையான மற்றும் ஒரே சமச்சீரான வானிலையுடன் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள கேரளா, ஒரு ஓய்வெடுக்கவும் சௌகரியமாகவும் இருக்க்க்கூடிய ஒரு வெப்பமண்டல நிலமாகும். மழைக்காலம் (ஜூன் – செப்டம்பர் மற்றும் அக்டோபர்-நவம்பர்) மற்றும் கோடை (பிப்ரவரி-மார்ச்) ஆகிய குறிப்பான பருவங்கள் இங்கே இருக்கின்றன, அதே சமயம் குளிர்காலத்தில் மட்டும் வெப்பநிலை சாதாரண அளவான 28-32 டிகிரி செல்சியஸில் இருந்து குறையும். பொதுவாக இனிமையான வானிலை நிலவுவதே எமது விருந்தினர்கள் இங்கே வர விரும்புவதற்கான காரணமாகும்.

மக்கள் மற்றும் வாழ்க்கை

மக்கள் மற்றும் வாழ்க்கை

கேரளா சமூக நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் இந்தியாவின் மிகவும் முன்னேற்றமிக்க மாநிலங்களில் ஒன்றாகும். இந்த மாநிலம் கல்வியறிவுள்ளவர்கள், அதிகமான வாழ்க்கை எதிர்பார்ப்பு மற்றும் குறைவான குழந்தை இறப்புள்ள மாநிலமாகும். ஆசியாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள பெண்களின் விகிதம் இடங்களில் கேரளாவும் ஒன்று. தனிச்சிறப்பான காஸ்மாபாலிட்டன் நோக்கில், இங்குள்ள மக்கள், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இருக்கிறார்கள், சேவைகள் மற்றும் வாய்ப்புகளுக்கான பெரிய அணுகலைக் கொண்டிருக்கிறார்கள் - நிர்வாகத்திலும் பெரிய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு

வரலாறு

கேரளாவின் வரலாறு அதன் வணிகத்துடன் நெருக்கமாக தொடர்புடையது, சமீப காலம் வரை அது அதன் நறுமணப் பொருட்களைச் சுற்றியே இருந்தது. இந்தியாவின் நறுமணக் கடற்கரையாக கொண்டாடப்பட்ட, பழமையான கேரளா, கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரபியர்கள், சீனர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரஞ்சுகாரர்கள், மற்றும் பிரிட்டிஷ்காரர்களை உள்ளடக்கி, உலகெங்கிலும் பல்வேறு பயணிகள் மற்றும் வணிகர்களை வரவேற்றது. இவர்கள் அனைவரும் இந்த மண்ணில் ஏதோ ஒரு வகையில் தங்களின் சுவடுகளை விட்டு சென்றிருக்கிறார்கள் மற்றும் உலகுடன் தொடர்பு கொள்வதற்க எமது சிறப்பு வகையை உருவாக்கிக் கொள்ள உதவியுள்ளது.

இடம்

தென்கிழக்கு நாடான இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கேரளா.

மாவட்டங்கள்

Kerala Map

முக்கிய நகரங்கள்

திருவனந்தபுரம் கொல்லம் கொச்சி திருச்சூர் கோழிக்கோடு

விமான நிலையங்கள்

திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம் கொச்சின் சர்வதேச விமானநிலையம் (CIAL), நெடும்பாசேரி, கோழிக்கோடு சர்வதேச விமானநிலையம், கரிப்பூர்

விசா தேவைகள்

விசா தேவைகளுக்கு தயவு செய்து கிளிச் செய்யவும்

காவல்துறை உதவி தொலைபேசி

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது +91 98461 00100 இரயில் பயணிக்கும் போது +91 98462 00100

பயணிகள் மற்றும் சுற்றுலா இயக்குபவர்களுக்கான ஒழுக்க விதிகள்

பயணிகள் மற்றும் சுற்றுலா இயக்குபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

வலைதளத்தைப் பற்றி

இது கேரள அரசின், சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளமாகும், மற்றும் இந்தியாவின் மிகப் பிரபலமான பயண வலைத்தளங்களில் ஒன்றாகும். இந்த தளம் கடவுளின் சொந்த தேசமான, கேரளா பற்றிய முழுமையான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இந்த தளம், 1998 முதல் ஆன்லைனில் இருக்கிறது, தற்போது 10 இந்திய மொழிகள் உட்பட, 21 மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக இந்த தளம் 3 மில்லியன் வருகைகளைப் பெறுகிறது. இந்தத் தளம் தேவைக்கேற்ப அடிக்கடி புதுப்பிக்கப்படுகிறது. அது 3000 வீடியோக்கள், ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், மற்றும் நூற்றுக்கணக்கான ஆடியோ கிளிப்புகளை உள்ளிட்டு கேரளாவின் மீதான பெரிய தரவுதளத்தைக் கொண்டிருக்கிறது. இரு வழி செயல்முறை மூலமாக gயணியர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்குகிறது மற்றும் தகவல் பலகை, பயணத்திட்டம், ஆன்லைன் போட்டிகள், ஆன்லைன் ஆடியோ-விஷுவல் கேலரிகள், வீடியோ வினாடிவினாக்கள், லைவ் வெப்காஸ்ட்கள், மின் புத்தகங்கள், மின் செய்திமடல்கள் முதலின போன்ற வழக்கமான ஆன்லைன் பயனருக்கு உகந்த ஊடாடுதல்கள் மூலமாக நவீன கால பயணியர்களின் மாறுபட்ட ஆர்வங்களை தடம் பற்றி வருகிறது. கேரள சுற்றுலாத்தளம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. அது மிகவும் புத்தாக்கமான பயனுள்ள தகவல் தொழில்நுட்பம்” என்கிற இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட கௌரமிக்க திறன் விருதையும் ”சிறந்த சுற்றுலா வலைதளத்திற்கான விருதையும்” 2000-2001, 2002-2003, 2005-2006, 2008-09, 2010-11, 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது. கேரள சுற்றுலா வலைதளம் இந்திய அரசின், தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் நிறுவப்பட்ட தனிச்சிறப்பான பொருளடக்கப் பிரிவில் கோல்டன் ஐகான் விருதையும், பிசி வேர்ல்டு பத்திரிக்கையின் நெட் 4 பிசி வேர்ல்டு வெப் விருது 2008ஐ சுற்றுலா வகைப்பிரிவில் சிறந்த இந்திய வலைத்தளத்திற்கும் பெற்றுள்ளது. 2005, 2013, 2014 மற்றும் 2016 ஆண்டுகளின் போது சிறந்த மின் செய்திமடலுக்கான பசிபிக் ஏசியன் டிராவல் அசோசியேஷனின் (PATA) தங்க விருது வடிவிலும் சிறந்த வலைதளத்துக்கான 2010ஆண்டு விருதும் துறையின் ஆன்லைன் முயற்சிகளுக்கான சர்வதேச அங்கீகாரம் வந்து சேர்ந்தது. இந்தியாவில், பத்தாண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து வாரியங்களின் வலைதளங்களில் இணையப் போக்குவரதில் முதலிடத்தை கேரள சுற்றுலா கொண்டிருக்கிறது. இணையப் போக்குவரத்தைப் பொறுத்தவரை ஆசிய பிசிபிக் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள வலைதளங்களில் முதன்மையான 10 சுற்றுலா வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கிறது.

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close