மலபார் சிக்கன் பிரியாணி ஒரு அசைவ சாத வகை உணவு உலகை விஞ்சிவிட்டது. கேரளாவின் மலபார் பிராந்தியத்திலிருந்தான இந்த சுவை மிகவும் பிரபலமானது, குறிப்பாக பிரியாணி பிரியர்களிடையே.
மூலப் பொருட்கள்
பஸ்மதி அரிசி - 1 கிலோ
சிக்கன் - 1
பிரியாணி மசாலா விழுது (பச்சை மிளகாய், இலவங்கம், கிராம்பு, பெருங்சீரகம், ஏலக்காய், மிளகு) - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 10
இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - 50 கிராம்
புதினா தழை - 25 கிராம்
தயிர் - 150 மிலி
தக்காளி - 150 கிராம்
வெங்காயம் - 1 கிலோ
கருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 2 துண்டுகள்
பிரியாணி இலை - 2
முந்திரி பருப்பு கிஸ்மிஸ் - 50 கிராம்
ஏலக்காய் - 5
நெய் - 200 கிராம்
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
பால் - 500 மிலி
குங்குமப்பூ - 1 சிட்டிகை
தண்ணீர் (அரிசிக்கு) - 1 லிட்டர்
தயாரிக்கும் முறை
வாணலியில் நெய்யை சூடாக்கவும். வெங்காயத்தை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இப்போது வெட்டி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சிப் பூண்டு கலவை, தயிர் மற்றும் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். சிக்கனை சேர்த்து வேக விடவும்.
அரிசியை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து நீரை வடிக்கட்டவும். வாணலியில் நெய்யை உருக்கி, மசாலாக்கள், வெட்டிய வெங்காயம், புதினா, கொத்துமல்லி தழை, முந்திரிப் பருப்புகள், கிஸ்மிஸ், பிரியாணி இலைகள் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு பால் மற்றும் நீ்ரை சேர்க்கவும். அது கொதிக்கும் வரை காத்திருந்து பிறகு அரிசியை போடவும். நெருப்பைக் குறைத்து, வாணலியை மூடிப் போட்டு மூடிவிடவும் 15 நிமிடங்களுக்கு வேக விடவும்.
இன்னொரு வாணலியை எடுத்துக் கொண்டு பாதி அரிசியை அதில் போடவும். இப்போது சிக்கனை அரிசியின் மீது போடவும். மீதமுள்ள அரிசியை சிக்கன் மீது போடவும். சரிசமமான படலத்தை உண்டாக்க வாணலியில் பரப்பிவிடவும். அரிசியிருக்கும் வாணலியில் ஆங்காங்கே குத்திவிட்டு குங்குமப்பூ பாலை ஒவ்வொரு துளையிலும் ஊற்றவும். சில தேக்கரண்டிகள் நெய், வதக்கிய வெங்காயம், முந்திரி பருப்பு மற்றும் கிஸ்மிஸை மேலே பரப்பி இறுக மூடவும். சுவையான மலபார் பிரியாணி பரிமாறுவதற்கு தயார்.
நன்றி: யுவராணி ரெசிடென்ஸி, கொச்சின்.
சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.