கேரளாவில் அனைத்து வேலைகளையும் நிறுத்திவைக்குமாறு இடையறாது மழைப் பெய்வதில்லை. சில மணி நேரங்கள் மழைப் பெய்யும் சூரியன் இடையில் எட்டிப்பார்க்கும். எப்போதாவது மழை சில நாட்களுக்கு நீடிக்கும் ஆனாலும் சூரிய வெளிச்சம் தூரத்தில் இருப்பதில்லை. இந்த பொன்னிற இடைவேளைகள் வாழ்க்கையின் இயற்கை ஓட்டத்திற்கு ஒரு சமநிலையை வழங்குகின்றன.
கேரளாவில் முதன்மையாக இரண்டு மழைப் பருவங்கள் தான். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் வரும், இது மலையாள நாட்காட்டியின் இடவ மாதத்தில் வருவதால் இடவப்பாதி என்று அழைக்கப்படுகிறது.
அக்டோபரின் மையவாக்கில் வடகிழக்கு பருவமழை வருகிறது. இது மலையாள நாட்காட்டியின் துலா மாதத்தில் வருகிறது என்பதால் துலாவர்ஷம் என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் துலாம் மாதத்தில் வரும் மழை. வங்களா விரிகுடாவில் இருக்கும் மேகங்கள் ஒன்று கூடி பாலக்காடு வழியாக மேற்குத்தொடர்ச்சி மலையில் நுழையும். சுற்றிச்சுழன்று வடக்கிழக்கு காற்றில் பறந்து வரும் கருமேகங்கள் கண்கொள்ளக் காட்சியாகும்.
கேரளக் கலைகளுக்கு மிகுந்த அர்ப்பணிப்பும் பயிற்சியும் தேவைப்படுகிறது. இந்த சொந்த கலை வடிவங்களுக்கு உடலின் ஒவ்வொரு நரம்பிலும் முழுமையானக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக கலைஞர்கள் ஆயர்வேத சிகிச்சைகளை செய்து கொள்ள வேண்டும். சிறப்பு மூலிகை எண்ணெய்கள் மற்றும் மருந்துகள் கலைஞர்களின் உடலில் மழைக்காலங்களில் தசைகளின் நெகிழ்வுத்தன்மை மற்றும் அசைவதற்கான திறனையும் உறுதி செய்வதற்காக பூசப்படும்.
இயற்கை மழையோடு திரும்ப இணையும் போது, அது மனிதர்களுக்கும் புத்துணர்வு பெறுவதற்கான ஒரு நேரமாக ஆகிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரையில், புத்துணர்வு சிகிச்சைகளுக்கான சிறப்பான காலம் மழைக்காலமாகும். மழைக்காலத்தின் போது, வளிமண்டலம் தூசுகளில்லாமல் குளிர்ச்சியாக இருக்கிறது, உடலில் உள்ள துவாரங்களை திறந்து, மூலிகை எண்ணெய்கள் மற்றும் சிகிச்சையை ஏற்கச் செய்கிறது.
சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.