எங்களின் அனைத்து வருகையாளர்களுக்கும் அவர்களின் பயணங்கள் சீராக இருப்பதற்கும் கடவுளின் சொந்த நாட்டில் அவர்கள் சிறந்த நேரத்தைக் கொண்டிருப்பதற்கும் சில பயணக் குறிப்புகளை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
பயணிகள் கொண்டு வருவதற்கான பணத்திற்கு எந்த வரம்பும் இல்லை
வங்கிகள் காலை 10.00 மணி முதல் மாலை 15.30 மணி வரை வார நாட்களிலும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும் செயல்படும், இரண்டாவது மற்றும் நான்கவது சனிக்கிழமைகள் விடுமுறைகளாகும்.
முக்கிய ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஷாப்பிங்க மையங்களில் முக்கிய கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
(மணி நேரம் (+), மெதுவாக (-) ISTயல்) அமெரிக்கா: -10.30 ஜெர்மனி: -4.30, கனடா: -10.30, பிரான்சு : -4.30, ஆஸ்திரேலியா: +4.30, ஸ்பெயின்: -4.30 யுஏஇ: -1.30, யுகே: - 5.30
உச்ச பருவம்:- செப்டம்பர்-மே மழைக்கால ப்புத்துணர்வு திட்டம்: ஜூன்-ஆகஸ்டு
பருத்தி உடைகள்; தொப்பிகள், சன்கிளாஸ்கள், சன்ஸ்கிரீன் லோஷன், முதலியன
போதை மருந்துகள் வைத்திருந்தால் சிறைத்தண்டனை உட்பட கடும் தண்டனைகள் விதிக்கப்படும்
சுற்றுலாத்துறையால் வகுக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மையங்களுக்கு மட்டும் செல்லவும். பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
கான்டினென்டல், சைனீஸ், இந்திய மற்றும் பொதுவான கேரள உணவுகளை உள்ளிட்டு பல்வேறு வகையன சமையலை அனைத்து தரமான உணவகங்களும் வழங்குகின்றன.
காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை : 100 தீயணைப்பு நிலையம்: 101 ஆம்புலன்ஸ்: 102, 106
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது (நெடுஞ்சாலை எச்சரிக்கை எண்): 9846100100 இரயில் பயணிக்கும் போது (இரயில்வே எச்சரிக்கை எண்): 9846 200 100 வலைதளம்: www.keralapolice.org
சில கோவில்கள் இந்துக்கள் அல்லாதவர்களை நுழைய அனுமதிப்பதில்லை. பெரும்பாலான கோவில்களில் ஆடைக்கான விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகின்றன. கோவில் வளாகங்களுக்குள் காலணிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு கேரள கடற்கரையிலும் ஆடையில்லாமல் இருக்க அனுமதியில்லை.
பொது இடங்களில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான கேரளா வீடுகளுக்கு செல்லும் வருகையாளர்கள் தங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே விட்டு செல்ல வேண்டும்.
நடத்தை, நேசத்தை வெளிப்படுத்துவதற்காக பொது இடங்களில் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது கேரளாவில் ஏற்றுக்கொள்ளப்படுகிற நடைமுறையல்ல.
வனவிலங்கு சரணாலயத்திற்கு வருகை தர, சரணாலயத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன்அனுமதி பெறவேண்டும். வலைதளம்: www.forest.kerala.gov.in மேலும் விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: வனங்களின் தலைமைப் பாதுகாப்பாளர், திருவனந்தபுரம் 695014 தொலைபேசி: +91 471 2322217
கேரள பற்றி மேலும் அறிந்துகொள்ள, www.kerala.gov.in எனும் கேரள அரசு வலைதளத்திற்கு வருகைத் தரவும்.
சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.